லாலாபேட்டை அருகே வாய்க்காலில் மூழ்கிய தொழிலாளி பிணமாக மீட்பு


லாலாபேட்டை அருகே வாய்க்காலில் மூழ்கிய தொழிலாளி பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 30 Aug 2019 3:45 AM IST (Updated: 30 Aug 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

லாலாபேட்டை அருகே வாய்க்காலில் மூழ்கிய தொழிலாளி பிணமாக மீட்கப்பட்டார்.

லாலாபேட்டை,

கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே உள்ள மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 35). கூலி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் மாலை மேட்டுமகாதானபுரம் வாய்க்காலுக்கு குளிக்க சென்றுள்ளார். அந்த வாய்க் காலில் தண்ணீர் அதிகளவில் சென்று கொண்டிருந்தது. அதில் இறங்கி சேகர் குளித்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங் கள்... என சத்தம் போட்டார். இதில் சிறிது நேரத்தில் அவர் வாய்க்காலில் மூழ்கினார்.

பிணமாக மீட்பு

இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் முசிறி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் வாய்க்காலில் இறங்கி சேகரை தேடினர். ஆனால் இரவு வெகுநேரம் ஆகிவிட்டதால் சேகரை கண்டுபிடிக்க முடியவில்லை.இதையடுத்து நேற்று காலை மீண்டும் தீயணைப்பு படை வீரர்கள் வாய்க்காலில் இறங்கி சேகரின் உடலை தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு சேகர் பிணமாக மீட்கப்பட்டார்.

அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது கல்நெஞ்சை கரையவைப்பதுபோல இருந்தது. பின்னர் சேகரின் உடலை லாலாபேட்டை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து லாலாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story