கோரிக்கைகளை வலியுறுத்தி சோபனபுரம் ஊராட்சி அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி சோபனபுரம் ஊராட்சி அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
உப்பிலியபுரம்,
உப்பிலியபுரத்தை அடுத்துள்ள சோபனபுரத்தில் நேற்று காலை அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. விஜயலட்சுமி தலைமை தாங்கினார். மகாலட்சுமி, கவிதா, அம்பிகா மற்றும் உமாதேவி பேசினர்.
100 நாள் வேலை வாய்ப்பை தடையின்றி வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்ட அட்டை வழங்க லஞ்சம் கேட்பதை கண்டிப்பது, வேலைக்காக மற்ற பகுதிகளுக்கு செல்லும்போது பயணப்படி வழங்க வேண்டும், குடிநீர் பிரச்சினை, சுகாதார சீர்கேடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
பேச்சுவார்த்தை
இதில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர் முத்துச்சாமி மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன், கொப்பம்பட்டி வருவாய் ஆய்வாளர் ராதா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, சங்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலைந்து சென்றனர். போராட்டத்தையொட்டி உப்பிலியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story