கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததை கண்டித்து: பாண்டவையாற்றின் கதவணைக்கு விவசாயிகள் மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம்


கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததை கண்டித்து: பாண்டவையாற்றின் கதவணைக்கு விவசாயிகள் மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 Aug 2019 3:45 AM IST (Updated: 31 Aug 2019 12:23 AM IST)
t-max-icont-min-icon

கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததை கண்டித்து பாண்டவையாற்றின் கதவணைக்கு விவசாயிகள் மாலை அணிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

கர்நாடகாவில் பெய்த கனமழையின் காரணமாக மேட்டூர் அணை நிரம்பியதையடுத்து காவிரி டெல்டா பகுதி பாசனத்திற்கு முதல்-அமைச்சர் கடந்த 13-ந்தேதி தண்ணீரை திறந்து வைத்தார். இந்தநிலையில் திருவாரூர் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகளால் வெண்ணாற்றில்் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் பல பாசன ஆறுகளில் தண்ணீர் செல்லாமல் உள்ளது. வெட்டாற்றில் மட்டும் தண்ணீர் திறக்கப் பட்டுள்ளது.

மேட்டூரில் உரிய காலத்தி்ல் தண்ணீர் திறக்கப்படாததால் ஆழ்குழாய் கிணறு உள்ளவர்கள் மட்டுமே குறுவை சாகுபடியை மேற்கொண்டனர். இதனால் குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்தது. ஒருபோக சம்பா சாகுபடியை மேற்கொள்ள விவசாயிகள் தீவிரம் காட்டி வந்தனர். இந்தநிலையில் ஆறுகளில் தண்ணீர் வராததால் விவசாயிகள் சாகுபடி பணிகளை தொடங்குவதில் சிக்கல் நிலவி வருவதால் வேதனை அடைந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் கடைமடை பகுதிக்கு ஆறுகளில் தண்ணீர் வராததை கண்டித்து மாங்குடி பகுதி விவசாயிகள் பாண்டவையாற்றின் கதவணைக்கு மாலை அணிவித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஒரு போக சம்பா சாகுபடியை பாதுகாக்க உடனே ஆறுகளில் தண்ணீர் திறக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

Next Story