சேலத்தில் கழிவுநீரை சுத்திகரிக்காமல் திருமணிமுத்தாற்றில் வெளியேற்றும் சாயப்பட்டறைகள் மீது நடவடிக்கை


சேலத்தில் கழிவுநீரை சுத்திகரிக்காமல் திருமணிமுத்தாற்றில் வெளியேற்றும் சாயப்பட்டறைகள் மீது நடவடிக்கை
x
தினத்தந்தி 31 Aug 2019 4:15 AM IST (Updated: 31 Aug 2019 4:33 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில், கழிவுநீரை சுத்திகரிக்காமல் திருமணிமுத்தாற்றில் வெளியேற்றும் சாயப்பட்டறைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம், 

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் வந்து தங்களுடைய கோரிக்கைகள் குறித்து பேசினர். கூட்டத்தில் விவசாயிகள் பேசிய விவரம் வருமாறு:-

சேலம் மாவட்டத்தில் மரவள்ளிக்கிழங்குகளுகான முத்தரப்பு கூட்டத்தை கூட்டி டன் ஒன்றுக்கு ரூ.12 ஆயிரத்து 500 என விலை நிர்ணயம் செய்ய வேண்டும். பயிர்களை தாக்கும் புதிய நோய்களை கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளில் வேளாண்மைத்துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

கால்நடை துறை சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் தீவனம் வழங்க வேண்டும். மாவட்டத்தில் விவசாயிகளுக்கான உதவித்தொகை கிடைக்காமல் பலர் உள்ளனர். எனவே அனைத்து விவசாயிகளுக்கும் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது மழை ஓரளவு பெய்துள்ளதால் விவசாயிகளின் நலன் கருதி ஒரு ஏக்கருக்கு 75 தென்னை மரக்கன்றுகள் இலவசமாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

Next Story