மாவட்ட செய்திகள்

பார்வையற்ற பெண்ணை பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை - திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு + "||" + Rape a blind woman Worker gets 7 years in prison Thiruvannamalai court verdict

பார்வையற்ற பெண்ணை பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை - திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு

பார்வையற்ற பெண்ணை பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை - திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு
பார்வையற்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
திருவண்ணாமலை,

வந்தவாசி தாலுகா பெரணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 52), தொழிலாளி. இவர், கடந்த 2013-ம் ஆண்டு மோரக்கனியனூர் பகுதியை சேர்ந்த பார்வைற்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் போளூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர். இதுதொடர்பாக வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் அர்ச்சனா ஆஜரானார்.

இந்த நிலையில் நேற்று வழக்கை விசாரித்து நீதிபதி விஜயராணி தீர்ப்பு கூறினார். அதில், பார்வையற்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஏழுமலைக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் இதில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ஏழுமலையை போலீசார் பலத்த காவலுடன் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து சென்று அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நாகர்கோவில் ஜெயிலில் கைதிக்கு கொரோனா சிறை அதிகாரிகள் உள்பட 150 பேருக்கு பரிசோதனை
நாகர்கோவில் ஜெயிலில் கைதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து சிறை அதிகாரிகள் உள்பட 150 பேருக்கு சளி, மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது.
2. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது
திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
3. ஓடும் பேருந்தில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் இருக்க இளம்பெண் பாலியல் பலாத்காரம் ; 2 பேருக்கு வலைவீச்சு
உத்தரப்பிரதேசத்தில் ஓடும் பேருந்தில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர்.
4. 3 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிரபல ஹாலிவுட் நடிகர் மீது குற்றச்சாட்டு
பிரபல ஹாலிவுட் நடிகர் டேனி மாஸ்டர்சன் மீது 3 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
5. சிறுமி பாலியல் பலாத்காரம் ; தொழிலாளிக்கு போலீஸ் வலைவீச்சு
விழுப்புரத்தை அடுத்த வளவனூர் அருகே உள்ள சின்னகுச்சிப்பாளையத்தை சேர்ந்த 11 வயதுடைய சிறுமி கோலியனூரில் உள்ள அரசு பள்ளியில் தற்போது 5-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.