அன்னவாசல், மாத்தூர், விராலிமலை போலீஸ் நிலையங்களில் தர்மபுரி அ.ம.மு.க. நிர்வாகி மீது அ.தி.மு.க.வினர் புகார்


அன்னவாசல், மாத்தூர், விராலிமலை போலீஸ் நிலையங்களில் தர்மபுரி அ.ம.மு.க. நிர்வாகி மீது அ.தி.மு.க.வினர் புகார்
x
தினத்தந்தி 1 Sept 2019 4:15 AM IST (Updated: 1 Sept 2019 1:28 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. மாவட்ட மகளிர் அணி செயலாளர் அன்னலட்சுமி தலைமையில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீயிடம் மனு கொடுத்தனர்.

அன்னவாசல்,

அ.தி.மு.க. மாவட்ட மகளிர் அணி செயலாளர் அன்னலட்சுமி தலைமையில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீயிடம் மனு கொடுத்தனர். அதில், தொழில் முதலீட்டாளர்களை சந்திக்க வெளிநாடு சென்றிருக்கும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது அவதூறு பரப்பும் வகையில் கிருஷ்ணா கேபிஎம் என்ற முகநூல் கணக்கில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த அ.ம.மு.க. நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி என்பவர் தகாத வார்த்தைகளால் தவறாகவும், ஆபாசமாகவும், கொச்சைபடுத்தியும், தவறான படங்களை வெளியிட்டும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். எனவே அவர் கணக்கை முடக்குவதோடு அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த தொண்டைமான் நல்லூர் கருப்பையா, வேலூர் கணேசன், நீர்பழனி சுரேஷ், விராலிமலை மணி ஆகியோர் மாத்தூர், மண்டையூர், விராலிமலை ஆகிய போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தனர்.

Next Story