மாவட்ட செய்திகள்

குழாயில் ஏற்பட்ட உடைப்பால் 30 அடி உயரத்திற்கு பீறிட்டு வெளியேறிய குடிநீர் கடை, வீடுகளுக்குள் புகுந்தது + "||" + The drinking water shop, which was smashed to a height of 30 feet due to a pipe break-in, broke into homes

குழாயில் ஏற்பட்ட உடைப்பால் 30 அடி உயரத்திற்கு பீறிட்டு வெளியேறிய குடிநீர் கடை, வீடுகளுக்குள் புகுந்தது

குழாயில் ஏற்பட்ட உடைப்பால் 30 அடி உயரத்திற்கு பீறிட்டு வெளியேறிய குடிநீர் கடை, வீடுகளுக்குள் புகுந்தது
மணப்பாறை அருகே குழாயில் ஏற்பட்ட உடைப்பால் 30 அடி உயரத்திற்கு மேல் குடிநீர் பீறிட்டு வெளியேறி, கடை மற்றும் வீடுகளுக்குள் புகுந்தது.
மணப்பாறை,

மணப்பாறை மற்றும் மருங்காபுரி ஆகிய இரண்டு தாலுகா பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது காவிரி குடிநீர் தான். இப்பகுதிகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக குளித்தலை மண்தட்டை பகுதியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பு பஸ் நிறுத்தம் அருகே, முதல் முறையாக அமைக்கப்பட்ட காவிரி கூட்டுக் குடிநீர் திட்டக்குழாயில் உடைப்பு ஏற்பட்டது. உடைப்பு ஏற்பட்ட இடத்தில் இருந்து காவிரி நீர் சுமார் 30 அடி உயரத்திற்கு மேல் பீறிட்டு வெளியேறியது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அந்த குழாயின் மின் மோட்டார் உடனடியாக நிறுத்தப்பட்டது.


வீடுகள், கடைகளை சூழ்ந்தது

இருப்பினும் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பீறிட்டு வெளியேறி தண்ணீர் அருகில் உள்ள வீடு மற்றும் கடைகளுக்குள் புகுந்தது. மேலும் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் சில வீடுகள் மற்றும் கடைகளை சூழ்ந்தது. இதையடுத்து வீடு மற்றும் கடைகளுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டனர். மேலும் உடைப்பு ஏற்பட்ட இடம் அருகே உள்ள ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான துணிகள் தண்ணீரில் மூழ்கின. தையல் எந்திரங்களும் பழுதடைந்தன.

சமீபத்தில் பன்னாங்கொம்பு அருகே காவல்காரன்பட்டி என்ற இடத்தில் காவிரி குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் பீறிட்டு வெளியேறியதில், பல லட்சம் லிட்டர் குடிநீர் மக்களுக்கு பயன்பாடின்றி வீணாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் வேதனை

மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவி வரும் கடுமையான வறட்சியால் நீர்நிலைகள், ஆழ்குழாய் கிணறுகள் வறண்டுவிட்டன. இதனால் காவிரி குடிநீரை மட்டுமே மக்கள் நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த குடிநீரும் கூட வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே வினியோகம் செய்யப்பட்டு வருவதால் மிகுந்த மன வேதனைக்கு மக்கள் ஆளாகி உள்ள நிலையில், இதுபோன்று காவிரி குடிநீர் வீணாகும் சம்பவம் அவர்களின் மனவேதனையை அதிகரிக்கச் செய்துள்ளது. எனவே இதுபோன்று குழாயில் உடைப்புகள் ஏற்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லை மும்பையில் 20 சதவீத குடிநீர் வெட்டு 5-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது
ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் குறைந்துள்ளது. இதனால் மும்பையில் 5-ந்தேதி முதல் 20 சதவீத குடிநீர் வெட்டு அமல்படுத்தப்படுகிறது.
2. கலசா-பண்டூரி குடிநீர் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி தகவல்
கலசா-பண்டூரி குடிநீர் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் வழங்கியிருப்பதாக நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி கூறியுள்ளார்.
3. திருப்பூரில் 12 இடங்களில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்; அதிகாரிகளின் பாராமுகம் ஏனோ?
தாகம் தீர்க்க தவிக்கும் பொதுமக்கள் ஒருபுறம் இருக்க, அதிகாரிகளின் பாராமுகத்தால் திருப்பூரில் 12 இடங்களில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது.
4. செஞ்சியில் 1½ மணி நேரத்தில் 11 செ.மீ. மழை கொட்டியது வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
செஞ்சியில் நேற்று மாலை 1½ மணி நேரத்தில் 11 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. இதில் பஸ் நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது.
5. சேலம் அருகே மேட்டுப்பட்டியில் ரூ.19.17 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்
சேலம் அருகே மேட்டுப்பட்டி பகுதியில் ரூ.19 கோடியே 17 லட்சம் மதிப்பிலான குடிநீர் திட்டப்பணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.