சென்னையில் வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளும் பணி தொடங்கியது


சென்னையில் வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 2 Sept 2019 3:45 AM IST (Updated: 1 Sept 2019 10:01 PM IST)
t-max-icont-min-icon

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை கோட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் உள்ள தங்கள் விவரங்களில் திருத்தங்களை தாங்களே செய்யும் திட்டத்தை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

சென்னை,

இந்த திட்டத்தின் மூலம் வாக்காளர்கள் தங்களது பெயர், பிறந்த தேதி, முகவரி, புகைப்படம் மற்றும் பாலினம் உள்ளிட்ட விவரங்களை வாக்காளர் உதவி கைப்பேசி செயலி மூலமும், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், 1950 என்ற தொலைபேசி மையம் மூலமும், வாக்காளர் உதவி மையத்தில் உள்ள வாக்காளர் பதிவு அலுவலகத்திலும், இ-சேவை மையம் மூலமும், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களில் ஒன்றை கொண்டு திருத்த விவரங்களை பதிவேற்றம் செய்யலாம்.

இந்தநிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில், வாக்காளர் உதவி மையம் அமைக்கப்பட்டு அங்கு வாக்காளர் பட்டியலில் உள்ள திருத்தங்கள் மேற்கொள்ளும் பணி நேற்று தொடங்கியது. இதில் பல பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது விவரங்களில் திருத்தம் செய்து கொண்டனர். மேலும் அங்கு வந்த பொதுமக்களுக்கு மாநகராட்சி ஊழியர்கள் செயலி மூலம் எவ்வாறு திருத்தம் செய்ய வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Next Story