மாவட்ட செய்திகள்

விநாயகர் சிலைகளை ஏரிகளில் கரைப்பதை தவிர்க்க வேண்டும் கலெக்டர் வேண்டுகோள் + "||" + Collector's request to avoid burning Ganesh idols in the lake

விநாயகர் சிலைகளை ஏரிகளில் கரைப்பதை தவிர்க்க வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்

விநாயகர் சிலைகளை ஏரிகளில் கரைப்பதை தவிர்க்க வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்
ஏரிகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் கூறினார்.
தஞ்சாவூர்,

நீர்நிலைகள் நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும் போது விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும்.


களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் எந்தவித ரசாயன கலவையற்றதுமான கிழங்கு மாவு மற்றும் மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

அனுமதிக்கப்பட மாட்டாது

நீர்நிலையில் கரையும் தன்மையுடைய, தீங்கு விளைவிக்காத இயற்கை வர்ணங்கள் உடைய விநாயகர் சிலைகளை உபயோகிக்க வேண்டும். ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்பட மாட்டாது. விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.

கடலோரத்தில், ஏரிகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதை தவிர்க்க வேண்டும். கடலில் குறைந்தபட்சம் அரை கி.மீ. தூரம் எடுத்துச்சென்று கரைக்க வேண்டும்.

சுற்றுச்சூழல்

தஞ்சை மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டிய இடங்கள் வருமாறு:-

தஞ்சையில் வடவாறு, கல்லணைக்கால்வாயிலும், திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், சுவாமிமலை பகுதிகளில் காவிரி ஆற்றிலும், திருபுவனம், திருவிடைமருதூர், ஆடுதுறை பகுதிகளில் வீரசோழன் ஆற்றிலும், பட்டுக்கோட்டை, பேராவூரணி, கடலோர பகுதிகளில் உள்ள சிலைகளை கடலில் கரைக்க வேண்டும்.

இந்த இடங்களில் போலீசாரின் முன்அனுமதி பெற்று விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கன்னியாகுமரியில் சுற்றுலா வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
கன்னியாகுமரியில் நடைபெற்று வரும் சுற்றுலா வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆய்வு செய்தார்.
2. டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்
டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. இடி, மின்னல் ஏற்படும்போது பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்
இடி, மின்னல் ஏற்படும் போது பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் உமா மகேஸ்வரி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
4. காய்ச்சலுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை கலெக்டர் சாந்தா ஆய்வு
நோயாளிகளுக்கு டாக்டர்களால் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளை கலெக்டர் சாந்தா நேரில் ஆய்வு செய்தார்.
5. ஓ.என்.ஜி.சிக்கு எதிராக மனு கொடுக்க வந்த பொதுமக்களை போலீசார் தடுத்து நிறுத்தினர் கலெக்டர் ஆய்வு செய்வதாக உறுதி
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு ஓ.என்.ஜி.சிக்கு எதிராக மனு கொடுக்க வந்த பொதுமக்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது கலெக்டர் ஆனந்த் நேரில் சந்தித்து ஆய்வு செய்வதாக உறுதியளித்தார்.