இந்தியாவுக்கு மட்டும் சொந்தம் அல்ல: உலக அளவில் பொருளாதார மந்தநிலை உள்ளது ஜி.கே.வாசன் பேட்டி
பொருளாதார மந்தநிலை என்பது இந்தியாவுக்கு மட்டும் சொந்தம் அல்ல, உலக அளவில் உள்ளது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
நாகர்கோவில்,
மக்கள் பணி, இயக்கப்பணி இவை இரண்டுக்கும் சமமாக முக்கியத்துவம் கொடுத்து மிகச்சிறப்பாக பணியாற்றியவர் பா.ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். குறிப்பாக அவர், தான் சார்ந்திருக்கும் இயக்கம் வளர வேண்டும் என்று கடினமாக உழைத்தவர். மத்திய அரசின் மக்கள் திட்டங்கள் கிராமம் முதல் நகரம் வரை சென்று சேரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு பணியாற்றினார். அத்தகைய கடின உழைப்பாளிக்கு, மக்கள் பணியை சிறப்போடு செய்தவருக்கு அவர் சார்ந்த இயக்கம், மத்திய அரசாங்கம் தெலுங்கானா மாநிலத்தின் கவர்னர் பதவியை கொடுத்து கவுரவித்திருக்கிறது. அவரை த.மா.கா. சார்பில் உளமார வாழ்த்துகிறோம்.
ரேஷன் மண்எண்ணெயை குறைத்திருப்பது தற்சமயம் இடைக்கால முடிவாக நாங்கள் பார்க்கிறோமே தவிர, அத்தியாவசிய பொருட்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் இடைவிடாமல் கொடுக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது. அதை த.மா.கா. வலியுறுத்துகிறது. எனவே இது சிறிய இடைவெளிதான். மீண்டும் அதனை ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு முறையாக, தாமதம் இன்றி, தங்குதடையின்றி வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
வங்கிகள் இணைப்பு
வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை பொறுத்தவரையில் வருங்கால இந்தியாவின் வளர்ச்சி அனைத்து துறையிலும் சிறக்க வேண்டும். நாடு வல்லரசாக மாற வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. அதற்கு படிப்படியாக, சரியான, முறையான நடவடிக்கைகள் தேவை. அதனை நோக்கியே இந்த அரசு சிறப்போடு தங்களது முடிவுகளை எடுத்து வருகிறார்கள் என்பது எங்களது கருத்து. வங்கி ஊழியர்களுக்கு உடனடி சிரமங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருந்தாலும்கூட, நாளடைவில் அவர்களுக்கே நன்மை பயக்கும் நிலையை இந்த முடிவு ஏற்படுத்தும்.
பொருளாதார மந்தநிலை என்பது இந்தியாவிற்கு மட்டும் சொந்தம் அல்ல. உலக அளவிலே இருக்கின்ற ஒரு சூழல். இந்திய அரசு குறிப்பாக நிதித்துறை எடுக்கிற அனைத்து முடிவுகளும் படிப்படியாக பலன் தரும்.
முதல்-அமைச்சர் வெளிநாடு பயணம்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் தொழில்கள் வளர வேண்டும், பலர் இங்கு வந்து தொழில் தொடங்கி பொருளாதார ரீதியாக நாட்டை உயர்த்த வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தின் அடிப்படையில் வெளிநாடு சென்றுள்ளார். முதல்-அமைச்சரின் வெளிநாடு பயணம் வெற்றிப்பயணமாக அமைந்து தமிழகத்துக்கு மேலும் வளர்ச்சியை பெற்றுத்தரக்கூடிய உறுதியான சூழலை ஏற்படுத்தி தரவேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.
அப்போது முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகர், மாவட்ட தலைவர் டி.ஆர்.செல்வம் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story