நன்னிலத்தில் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்: அமைச்சர் காமராஜ் பங்கேற்பு


நன்னிலத்தில் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்: அமைச்சர் காமராஜ் பங்கேற்பு
x
தினத்தந்தி 3 Sept 2019 3:00 AM IST (Updated: 3 Sept 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைத்தீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள் தலைமை தாங்கினார். இதில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நன்னிலம்,

முதல்-அமைச்சரால் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிக்கப்பட்டு, தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் ஓய்வூதியம், விதவை உதவி தொகை, கல்வி உதவித்தொகை, வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக வழங்குகிறார்கள். இம்மனுக்கள் மீது ஒரு மாத காலத்திற்குள் தீர்வு காணப்படும்.விலையில்லா வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்காக 30 ஆயிரம் வீட்டு மனைப்பட்டாக்கள் தயாராக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

இதில் உதவி கலெக்டர் முருகதாஸ், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் ஜெயதீபன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சம்பத், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராம.குணசேகரன், தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணைய தலைவர் அன்பு, முன்னாள் பேரூராட்சி தலைவர் ராணிசுவாதிகோபால், கூட்டுறவு சங்க தலைவர் பக்கிரிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைப்போல வலங்கைமான், ஆவூர் ஆகிய பகுதிகளில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு பொதுமக்கள், விவசாயிகளிடம் இருந்து 1,200-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இதில் சமூக பாதுகாப்பு தனி துணை கலெக்டர் ஜெயதீபன், தாசில்தார் இஞ்ஞாசிராஜ், நீடாமங்கலம் பால் வழங்கும் சங்க துணைத்தலைவர் இளவரசன், அவளிவநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story