சேலத்தில் தொழில் அதிபர் வீட்டில் நகைகள் கொள்ளை


சேலத்தில் தொழில் அதிபர் வீட்டில் நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 3 Sept 2019 4:00 AM IST (Updated: 3 Sept 2019 2:08 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் தொழில் அதிபர் வீட்டில் நகைகள் கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம், 

சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள சாமியப்பன் நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 40). இவர் சேலம் குகை பகுதியில் பனியன் கம்பெனி நடத்தி வரும் தொழில் அதிபர் ஆவார். இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் மேச்சேரியில் உள்ள தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர் அன்று நள்ளிரவு வீட்டிற்கு வந்தார்.

அப்போது வீட்டின் வெளிக்கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டினுள் சென்று பார்த்த போது அங்கு பீரோவில் வைக்கப்பட்டு இருந்த துணிகள் சிதறி கீழே கிடந்ததையும், பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 7½ பவுன் நகைகள் கொள்ளை போய் இருப்பது தெரிய வந்தது.

இது குறித்து அவர் அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நகையை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறும் போது உறவினர் வீட்டிற்கு செல்லும் முன்பு சீனிவாசன் வீட்டில் இருந்த பீரோவின் சாவியை அதிலேயே விட்டு சென்று உள்ளார். எனவே வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் சிரமம் இன்றி நகை எடுத்து சென்று உள்ளனர் என்று கூறினர். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு நடந்த இந்த கொள்ளை சம்பவத்தால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Next Story