பெண்கள் மீதான வன்முறைகளை தடுக்கக்கோரி தஞ்சையில், மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


பெண்கள் மீதான வன்முறைகளை தடுக்கக்கோரி தஞ்சையில், மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Sep 2019 10:00 PM GMT (Updated: 3 Sep 2019 8:21 PM GMT)

பெண்கள் மீதான வன்முறைகளை தடுக்கக்கோரி தஞ்சையில், மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர், 

தஞ்சை மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தஞ்சை ரெயில் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர செயலாளர் வசந்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி, மாவட்ட தலைவி கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் பொன்னுத்தாய் கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் மீதான வன்முறைகள், பாலியல் வன்முறைகளை மத்திய மாநில, அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். பெண்களை இழிவாக பேசுபவர்கள் மீது பாரபட்சமின்றி நட வடிக்கை எடுக்க வேண்டும். பெண்களுக்கு கல்வி வேண்டாம், வேலை வேண்டாம் எனக்கூறும் மனுதர்மத்தை தூக்கிப்பிடிக்கும் தலைவர்களை கண்டிப்பது.

உணவு பாதுகாப்பு மசோதா, புதிய கல்விக்கொள்கை, விலைவாசி உயர்வு, பொருளாதார சீரழிவு, பொதுத்துறைகளை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் மாலதி, நிர்வாகிகள் வசந்தி, வினிசிலாராணி, மலர்க்கொடி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story