எலக்ட்ரானிக்ஸ் கடை உரிமையாளர் கொலையில் திடீர் திருப்பம்: கள்ளக்காதல் விவகாரத்தில் கொன்றது அம்பலம்


எலக்ட்ரானிக்ஸ் கடை உரிமையாளர் கொலையில் திடீர் திருப்பம்: கள்ளக்காதல் விவகாரத்தில் கொன்றது அம்பலம்
x
தினத்தந்தி 4 Sep 2019 10:30 PM GMT (Updated: 4 Sep 2019 8:26 PM GMT)

தர்மபுரி அருகே எலக்ட்ரானிக்ஸ் கடை உரிமையாளர் கொலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்தது அம்பலமானது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பாப்பாரப்பட்டி,

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் ராஜா (வயது 45). இவர் அந்த பகுதியில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கடை வைத்து நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு கடையில் இருந்து ராஜா பாரதிபுரத்தில் உள்ள வீட்டுக்கு சைக்கி ளில் சென்ற போது மர்ம நபர்கள் கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்தனர்.

மேலும் ராஜாவின் பக்கத்து வீட்டை சேர்ந்த சத்துணவு அமைப்பாளரான திலகவதி (42), இவரது மகன் கவுதம் (22) ஆகிய 2 பேரையும் அந்த நபர்கள் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த தாய்-மகன் 2 பேரும் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ராஜாவுக்கும், சத்துணவு அமைப்பாளரான திலகவதிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதை அறிந்த திலகவதியின் மகன் கவுதம் தனது தாயாரை கண்டித்துள்ளார். இருப்பினும் அவர் ராஜாவுடனான கள்ளத்தொடர்பை கைவிடவில்லை. இதனால் கவுதம், ராஜா மற்றும் திலகவதியை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளார். அதன்படி நேற்று முன்தினம் கடையில் இருந்து வந்த ராஜாவை, கவுதம் வழிமறித்து கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்துள்ளார்.

இருப்பினும் ஆத்திரம் அடங்காமல் வீட்டுக்கு சென்று தனது தாயாரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றுள்ளார். பின்னர் கவுதம் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றது அம்பலத்துக்கு வந்து உள்ளது ெ- கள்ளக்காதல் விவகாரத்தில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story