9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 16 இடங்களில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 16 இடங்களில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Sept 2019 4:30 AM IST (Updated: 6 Sept 2019 10:32 PM IST)
t-max-icont-min-icon

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டத்தில் 16 இடங்களில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விழுப்புரம்,

தொடக்க கல்வித்துறையை முற்றிலுமாக அழிக்க நினைக்கும் பள்ளிக்கல்வி துறையின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், அரசாணை 101, 145-ஐ ரத்து செய்யக்கோரியும், ஏற்கனவே நடந்த போராட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் மீதான துறை ரீதியான நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் ஒன்றிய அளவில் அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஜாக்டோ- ஜியோ) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் ஒன்றிய அளவில் 16 இடங்களில் நேற்று மாலை ஜாக்டோ- ஜியோ அமைப்பினர், கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விக்கிரவாண்டியில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மகிமைதாஸ் தலைமையிலும், வளவனூரில் ஒருங்கிணைப்பாளர் ஜெயானந்தம் தலைமையிலும், காணையில் அறிவழகன் தலைமையிலும், கண்டமங்கலத்தில் சுப்பிரமணியன் தலைமையிலும், திண்டிவனத்தில் சீனிசாமி தலைமையிலும், மயிலத்தில் ராமமூர்த்தி தலைமையிலும், மேல்மலையனூரில் மணிமாறன் தலைமையிலும், திருக்கோவிலூரில் ரமேஷ் தலைமையிலும், அரகண்டநல்லூரில் டோமினிக் தலைமையிலும், சங்கராபுரத்தில் தங்கராசு தலைமையிலும், ரிஷிவந்தியத்ததில் ஜாகீர் தலைமையிலும், கள்ளக்குறிச்சியில் வீரபத்திரன் தலைமையிலும், சின்னசேலத்தில் ராஜா தலைமையிலும், வானூரில் துளசிங்கம் தலைமையிலும், உளுந்தூர்பேட்டையில் ராமதாஸ் தலைமையிலும், திருவெண்ணெய்நல்லூரில் சண்முகானந்தம் தலைமையிலும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story