தனியார் பஸ் மோதி வாலிபர் பலி - டிரைவர் கைது


தனியார் பஸ் மோதி வாலிபர் பலி - டிரைவர் கைது
x
தினத்தந்தி 7 Sept 2019 3:30 AM IST (Updated: 7 Sept 2019 2:11 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டம் அருகே தனியார் பஸ் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

ஜெயங்கொண்டம், 

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள இருகையூர் கிராமத்தை சேர்ந்தவர் செங்குட்டுவன் மகன் ஜெயச்சந்திரன்(வயது 18). விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை தனது மோட்டார் சைக்கிளில் காரைக்குறிச்சி நூலகம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த தனியார் பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஜெயச்சந்திரன் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தா.பழுர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சனா, தனியார் பஸ் டிரைவர் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்த ராஜாராமன்(40) என்பவர் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story