கிருஷ்ணகிரி அருகே, மணல் கடத்திய 7 பேர் கைது - கார்-லாரிகள் பறிமுதல்


கிருஷ்ணகிரி அருகே, மணல் கடத்திய 7 பேர் கைது - கார்-லாரிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 7 Sept 2019 3:30 AM IST (Updated: 7 Sept 2019 2:28 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அருகே மணல் கடத்திய 7 பேரை போலீசார் கைது செய்தனர். மணல் கடத்த பயன்படுத்திய கார், லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் கிருஷ்ணகிரி அருகே உள்ள பெல்லாரம்பள்ளி ஏரி அருகே ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சிலர் திருட்டுதனமாக டிப்பர் லாரிகளில் மணல் அள்ளி கடத்தி கொண்டிருந்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

போலீசாரை பார்த்த உடன் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனாலும் அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், அவர்கள் கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி (வயது 39), பெத்ததாளப்பள்ளி கோவிந்தராஜ் (27), பெல்லாரம்பள்ளி மாதன் (22), ஹரி (37), ராமன் (45), மல்லேஷ் (25), சாரதி (27) ஆகிய 7 பேர் என தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 2 லாரிகள், ஒரு கார், ஒரு மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story