பால்கர் மாவட்டத்தில் மீண்டும் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு
பால்கர் மாவட்டத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவாகி உள்ளது.
வசாய்,
பால்கர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு முதல் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக மக்கள் பீதியில் இருந்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன் தினம் ஜவகர் டவுண் பகுதியில் தொடர்ச்சியாக 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 7.45 மணி மற்றும் 7.56 மணி அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 2.7 ஆக பதிவாகியிருந்தது. நிலநடுக்கத்தின் காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகள் லேசாக அதிர்ந்தன. இதனால் மக்கள் வீடுகளில் இருந்து பதறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர்.
பால்கர் மாவட்டத்தில் ஏற்பட்டு வரும் தொடர் நிலநடுக்கத்தால் மக்கள் பீதிக்குள்ளாகி உள்ளனர்.
Related Tags :
Next Story