ராமேசுவரம்-பெங்களூரு இடையே காரைக்குடி, திருச்சி வழியாக புதிய ரெயில் இயக்க கோரிக்கை


ராமேசுவரம்-பெங்களூரு இடையே காரைக்குடி, திருச்சி வழியாக புதிய ரெயில் இயக்க கோரிக்கை
x
தினத்தந்தி 8 Sept 2019 4:15 AM IST (Updated: 8 Sept 2019 3:20 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம்-பெங்களூரு இடையே காரைக்குடி, திருச்சி வழியாக புதிய ரெயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காரைக்குடி,

மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் லெனின் தலைமையில் அதிகாரிகள் குழு தண்டவாளங்களில் ஆய்வு பணிக்காக காரைக்குடி வந்தனர். அதிகாரிகள் குழுவினரை காரைக்குடி ரெயில் நிலைய சூப்பிரண்டு குமரேசன் வரவேற்றார்.

அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்ட பின்பு அவர்களை காரைக்குடி தொழில் வணிக கழக துணைச் செயலாளர் சையது கந்தசாமி, ரெயில்வே பயணிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பிராட்லா ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனு அளித்த னர். அதில் கூறியிருப்பதாவது,

காரைக்குடி ரெயில்வே நிலையத்தில் உள்ள இருசக்கர, நான்கு சக்கர வாகன நிறுத்துமிடங்களுக்கு மேற்கூரை அமைக்க வேண்டும். செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி இயக்க வேண்டும். ராமேசுவரம்-கோவை வாரம் ஒருமுறை செல்லும் ரெயிலை தினசரி இயக்க வேண்டும்.

ராமேசுவரத்திலிருந்து பெங்களூருக்கு, காரைக்குடி, திருச்சி வழியாக புதிய வழித்தடம் ஏற்படுத்தி தினமும் ரெயில் இயக்கப்பட வேண்டும். நடைபாதை மேம்பால வேலைகளை துரிதப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் குழுவினர் தெரிவித்தனர்.

Next Story