ஒவ்வொரு மரம் வெட்டப்படுவதும் எனக்கு வலியை உண்டாக்கும்; முதல்-மந்திரி பட்னாவிஸ் பேச்சு
மும்பை ஆரேகாலனியில் 3-வது மெட்ரோ ரெயில் திட்டத்தில் மெட்ரோ ரெயில் பணிமனை அமைப்பதற்காக 2 ஆயிரத்து 700 மரங்களை வெட்ட மாநில அரசு முடிவு செய்து உள்ளது. இதற்கு பிரபலங்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மும்பை,
மும்பையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-
நான் ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர். ஒவ்வொரு மரம் வெட்டப்படுவதும் எனக்கு வலியை உண்டாக்கும். நம்முடைய சுற்றுச்சூழல் சமநிலையை அடைய வேண்டும். மக்கள் சொந்த வாகனங்களை தவிர்த்து மெட்ரோ ரெயில் பயணத்துக்கு மாறினால் கார்பன்-டை ஆக்சைடின் உமிழ்வு குறையும். கார்பன்-டை ஆக்சைடு வெளியேற்றத்தை சமப்படுத்த 2 கோடி மரங்கள் தேவைப்படும்.
ஆரேகாலனியில் வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும். 500 மரங்கள்பெயர்த்து நடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story