மாவட்ட செய்திகள்

நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது + "||" + There is no rain in the catchment area: Drainage of Bhawanisagar Dam

நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
பவானிசாகர்,

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீராதாரமாக பவானிசாகர் அணை விளங்குகிறது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்பட்டு வருகிறது. பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆறு, கீழ்பவானி வாய்க்காலில் திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் மொத்தம் 2½ லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகிறது. பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.


நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன்காரணமாக நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 95 அடியை தாண்டியது.

இந்தநிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தற்போது மழை இல்லை. நேற்று முன்தினம் மாலை வினாடிக்கு 5 ஆயிரத்து 594 கன அடி நீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 95.83 அடியாக இருந்தது.

நேற்று அணைக்கு நீர்வரத்து அதிரடியாக குறைந்து வினாடிக்கு 3 ஆயிரத்து 657 கனஅடியாக இருந்தது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.02 அடியாக உள்ளது. அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு வினாடிக்கு 1,350 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடியும் திறந்து விடப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவில் திடீர் மழை ; காட்டுத்தீயின் தாக்கம் குறைகிறது
ஆஸ்திரேலிய நாட்டில் அதன் தென் பகுதியிலும், நியூசவுத் வேல்ஸ், விக்டோரியா கடற்கரையையொட்டிய பகுதிகளிலும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் காட்டுத்தீ தொடர்ந்து பரவி வருகிறது.
2. டெல்டா பகுதியில் கொட்டிய மழை: அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்தன - விவசாயிகள் கவலை
டெல்டா பகுதியில் கொட்டிய மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் வயலில் சாய்ந்துவிட்டன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
3. நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை: நிரம்பி வரும் அணைகள்; விவசாயிகள் மகிழ்ச்சி
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் அணைகள் நிரம்பி வருகின்றன. இது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
4. தமிழகத்தில் இன்று காலை பரவலாக மழை
தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
5. கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.