ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகளுடன் ‘டெங்கு’ காய்ச்சல் சிறப்பு சிகிச்சை வார்டு


ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகளுடன் ‘டெங்கு’ காய்ச்சல் சிறப்பு சிகிச்சை வார்டு
x
தினத்தந்தி 9 Sep 2019 10:45 PM GMT (Updated: 9 Sep 2019 3:59 PM GMT)

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி தலைமை தாங்கினார்.

சென்னை,

இந்த நிகழ்ச்சியில் மருத்துவ படிப்பு மாணவர்கள் மற்றும் நர்சிங் மாணவர்கள் நாடகம் நடத்தி நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பின்னர் ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 50 ஆண்கள் மற்றும் 50 பெண்கள் என மொத்தம் 100 படுக்கை வசதி கொண்ட டெங்கு காய்ச்சல் சிறப்பு சிகிச்சை வார்டுகள் தயார் நிலையில் உள்ளன. இதன்மூலம் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல்கள் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 1000 ரத்த வகைகளை சேமிக்கும் வகையில் ரத்த வங்கி தயாராக உள்ளது. புறநோயாளிகள் பிரிவுக்கு வரும் காய்ச்சல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அங்கு சிறப்பு காய்ச்சல் சிகிச்சைப்பிரிவு பணியாற்றி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story