திருவள்ளூரில் - விழிப்புணர்வு உறுதிமொழி
திருவள்ளூரில் உள்ள ஆர்.எம்.ஜெயின் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று பள்ளி கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் போஷன் அபியான் தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் உணவு திருவிழா நடைபெற்றது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கினார். பின்னர் கலெக்டர் தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு குறித்த உறுதிமொழியை வாசிக்க அதனை பின்தொடர்ந்து பள்ளி மாணவிகள் ஆசிரியர்கள் வாசித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பள்ளி வளாகத்தில் ஊட்டச்சத்து குறித்து வைக்கப்பட்டிருந்த உணவு திருவிழாவை பார்வையிட்டு இது சம்பந்தமாக அங்கிருந்த பள்ளி மாணவிகளிடம் கேள்விகளை கேட்டார். அப்போது சரியான பதில் அளித்த மாணவிகளுக்கு கலெக்டர் சால்வை அணிவித்து புத்தகங்களை வழங்கி பாராட்டினார். அதைத்தொடர்ந்து பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் மாவட்ட கலெக்டர் பள்ளி மாணவிகளிடம் கை கழுவும் பழக்கம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி கை கழுவுவது குறித்து செயல்முறை விளக்கத்துடன் செய்து காண்பித்து மாணவிகளை ஊக்கப்படுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி, தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதி ஸ்டீபன், பள்ளி தலைமை ஆசிரியை செல்வி, திருவள்ளூர் தாசில்தார் பாண்டியராஜன், மாவட்ட கல்வி அலுவலர் முனி சுப்பராயன் மற்றும் அரசு அலுவலர்கள் பள்ளி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story