தேனியில், அரசு டாக்டர் வீட்டில் 11½ பவுன் நகைகள் திருட்டு - செவிலியர் உள்பட 2 பேர் கைது
தேனியில் அரசு டாக்டர் வீட்டில் 11½ பவுன் நகைகள் திருட்டு போனது. இதையடுத்து செவிலியர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தேனி,
தேனி எடமால் தெருவை சேர்ந்த சண்முகம் மனைவி ராதா (வயது 56). இவர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். மேலும், எடமால் தெருவில் உள்ள ஒரு மருத்துவமனையின் மாடியில் குடியிருந்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் தனது கழுத்தில் அணிந்து இருந்த தங்கச்சங்கிலி, வளையல்கள் என 11½ பவுன் நகைகளை வீட்டில் கழற்றி வைத்துவிட்டு மருத்துவமனைக்கு சென்று விட்டார். பின்னர், வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது நகைகளை காணவில்லை.
இந்த சம்பவம் குறித்து ராதா தேனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், நகைகளை தனது வீட்டில் சமையல் வேலை பார்த்த ஜான்சி (45), செவிலியர் தேவி (35) ஆகியோர் திருடி இருக்கலாம் என்று தெரிவித்து இருந்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின்பேரில் ஜான்சி, தேவி இருவரையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர்கள் இருவரும் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 11½ பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story