திருச்செங்கோடு அருகே ரூ.19 லட்சத்தில் அகரம் ஏரி புனரமைக்கும் பணி - கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு


திருச்செங்கோடு அருகே ரூ.19 லட்சத்தில் அகரம் ஏரி புனரமைக்கும் பணி - கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு
x
தினத்தந்தி 13 Sep 2019 11:15 PM GMT (Updated: 13 Sep 2019 7:47 PM GMT)

திருச்செங்கோடு அருகே ரூ.19 லட்சத்தில் அகரம் ஏரி புனரமைக்கும் பணிகளை கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு செய்தார்.

எலச்சிபாளையம்,

தமிழக முதல்-அமைச்சர் உத்தரவுப்படி 2019-2020-ம் ஆண்டு குடிமராமத்து திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் சரபங்கா வடிநில கோட்ட பகுதிகளில் ரூ.5 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் 14 பணிகள் மேற்கொள்ளவும், மேட்டூர் அணைக்கோட்ட பகுதிகளில் ரூ.1 கோடியே 21 லட்சம் மதிப்பீட்டில் 5 பணிகள் மேற்கொள்ளவும் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு வட்டம் அகரம் ஏரியில் ரூ.19 லட்சத்தில் மதகு சீரமைக்கும் பணி, ஏரியின் கரை கான்கிரீட் சுவர் அமைக்கும் பணி, கரை பலப்படுத்தும் பணி உள்ளிட்ட குடிமராமத்து பணிகள் அகரம் ஏரி நீர்பாசன விவசாயிகள் சங்கத்தின் மூலமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை விவசாய சங்கத்தினருடன் கலெக்டர் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் கவிதா ராணி, உதவி பொறியாளர் இளங்கோ, பாசன விவசாய சங்கத்தினர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story