பாப்பாநாட்டில் சாலையில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர் - அகற்ற பொதுமக்கள் கோரிக்கை


பாப்பாநாட்டில் சாலையில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர் - அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 13 Sep 2019 9:30 PM GMT (Updated: 13 Sep 2019 10:21 PM GMT)

பாப்பாநாட்டில் சாலையில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரத்தநாடு, 

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியம் பாப்பாநாடு பழைய சந்தைப்பேட்டையில் இருந்து சோழகன்கரை சாலைக்கு செல்லும் பிள்ளையார்கோவில் இணைப்பு சாலை, பள்ளி மாணவ-மாணவிகள், அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் செல்லக்கூடிய முக்கிய சாலையாகும். லேசான மழை பெய்தால் போதும் இந்த சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி விடுகிறது. மழைநீர் வெளியேற வடிகால் வாய்க்கால் பராமரிக்கப்படாததால் அந்த மழைநீர் சாலையில் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்கு உள்ளாகிறார்கள்.

எனவே கனமழை பெய்வதற்கு முன்பு பாப்பாநாடு பிள்ளையார் கோவில் தெரு சாலையை விரைவில் செப்பனிட்டு வடிகால் வாய்க்காலை தூர்வாரி சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாப்பாநாடு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story