ஏரிகள் தூர்வாரும் பணிகளை கலெக்டர் டி.ஜி.வினய் ஆய்வு


ஏரிகள் தூர்வாரும் பணிகளை கலெக்டர் டி.ஜி.வினய் ஆய்வு
x
தினத்தந்தி 15 Sept 2019 4:00 AM IST (Updated: 15 Sept 2019 12:14 AM IST)
t-max-icont-min-icon

ஆயிஏரி ஆகிய ஏரிகளை ஆழப்படுத்தி, கரைகள் பலப்படுத்தும் பணி மற்றும் தூர்வாரும் பணிகள், வரத்து வாய்க்கால்களை சீரமைக்கும் பணிகளை கலெக்டர் டி.ஜி.வினய் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டம், காவனூரில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் இச்சிலேடி ஏரி, ஆயிஏரி ஆகிய ஏரிகளை ஆழப்படுத்தி, கரைகள் பலப்படுத்தும் பணி மற்றும் தூர்வாரும் பணிகள், வரத்து வாய்க்கால்களை சீரமைக்கும் பணிகளை கலெக்டர் டி.ஜி.வினய் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், அரியலூர் மாவட்டத்திற்கு 2019-20-ம் ஆண்டிற்கு சிறுபாசன ஏரிகள் 106-ம், குட்டை, ஊரணிகள் 872-ம் தூர்வாரி புனரமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறுபாசன ஏரி புனரமைக்கும் பணிக்கு ஒவ்வொரு சிறுபாசன ஏரிக்கும் தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டிலும், குட்டை, ஊரணிகள் புனரமைப்பு பணிக்கு தலா ரூ.1 லட்சம் மதிப்பீட்டிலும் பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டு, தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. காவனூரில் நடந்து வரும் சிறுபாசன ஏரிகள் புனரமைக்கும் பணிகளை எந்தவித ஆக்கிரமிப்புகள் இன்றியும், ஏரிகளில் முழுபரப்பளவை முறையாக ஆய்வு செய்து, பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார். மேலும் இப்பணிகள் அனைத்தும் விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் கலையரசன் மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
1 More update

Next Story