மாவட்ட செய்திகள்

சிதம்பரம், வடலூரில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் + "||" + Jatdo-Geo's protest in Chidambaram, Vadalur

சிதம்பரம், வடலூரில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

சிதம்பரம், வடலூரில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
சிதம்பரம், வடலூரில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம்,

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் சிதம்பரம் காந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அனைத்து ஆசிரியர் சங்க கூட்டமைப்பு மாநில துணை செயலாளர் தமிழ் குமரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க செயலாளர் தமிழ்செல்வன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


தேசிய கல்வி கொள்கை 2019- வரைவு அறிக்கையை திரும்ப பெறுதல், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், ஜாக்டோ- ஜியோ வேலை நிறுத்த போராட்டத்தின் போது ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்தல், ஊதிய முரண்பாடுகளை களைதல், தொகுப்பூதிய முறையில் பணிபுரியும் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அம்பேத்கர், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் அறிவழகன் ஆகியோர் ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கி பேசினர். இதில் நிர்வாகிகள் ஞானமணி, ஆரோக்கிதாஸ் ,மகேந்திரவர்மன், கணேசன்,இலங்கேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் வடலூரில் மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளரும், வடலூர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான மணிவண்ணன் தலைமை தாங்கினார். தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்

அன்பரசன், அரசு பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் கிறிஸ்டோபர், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட செயலாளர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

குறிஞ்சிப்பாடி வட்டத்தின் சார்பில் ராயப்பன், கனகராஜ், குமார், சுந்தர்ராஜ், ஜோதிசேகரன், ராதாகிருஷ்ணன், ஜெயராமன், கீரப்பாளையம் நித்யானந்தம், கனிக்கண்ணன், புவனகிரி முத்துவடிராஜா, முருகன், நெய்வேலி சார்லஸ் ஜேம்ஸ், அமுதா, விநாயக மூர்த்தி உள்ளபட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை