மாவட்ட செய்திகள்

ஒப்பந்த தொழிலாளர்களின் தினக்கூலியை உயர்த்தக்கோரி 10-ந் தேதி மறியல் போராட்டம் + "||" + The 10th picket struggle to raise the daily wages of contract workers

ஒப்பந்த தொழிலாளர்களின் தினக்கூலியை உயர்த்தக்கோரி 10-ந் தேதி மறியல் போராட்டம்

ஒப்பந்த தொழிலாளர்களின் தினக்கூலியை உயர்த்தக்கோரி 10-ந் தேதி மறியல் போராட்டம்
ஒப்பந்த தொழிலாளர்களின் தினக்கூலியை உயர்த்தக்கோரி வருகிற 10-ந் தேதி மறியல் போராட்டம் நடத்தப்படும் என மின் ஊழியர் மத்திய அமைப்பின் மண்டல குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர்,

தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் திருச்சி மண்டல குழு கூட்டம் பெரம்பலூரில் நடந்தது. இதற்கு மாநில துணை தலைவர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். பெரம்பலூர் வட்ட செயலாளர் பன்னீர்செல்வம் வரவேற்றார். மாநில துணை தலைவர் ராஜாராமன், திருச்சி மண்டல செயலாளர் அகஸ்டின் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மின்வாரியத்தில் பல ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிபவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு தினக்கூலி ரூ.380 அரசு வழங்கிடக்கோரி அடுத்த மாதம் (அக்டோபர்) 10-ந் தேதி திருச்சி மண்டல மின்வாரிய அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படும்.


காலிப்பணியிடங்களை...

மின்வாரியத் துறை பொதுத்துறையாக தொடர்ந்திட, மண்டல அளவில் மின்நுகர்வோர்கள், தொழிலாளர்கள், விவசாய தொழிலாளிகள் பங்கேற்கும் கருத்தரங்கம் நவம்பர் மாதம் 23-ந் தேதி திருச்சியில் நடத்தப்படவுள்ளது. புதிய பகுதிநேர துப்புரவு பணியாளர்களுக்கு பணி நிரந்தர உத்தரவை அரசு விரைந்து வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். டிசம்பர் மாதம் 1-ந் தேதி முதல் மின்வாரிய துறையினருக்கு வழங்கவேண்டிய ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மின்ஊழியர் மத்திய அமைப்பின் திருச்சி மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் பெரம்பலூர் வட்ட பொருளாளர் கண்ணன் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. முதலைப்பட்டியில் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து 2-வது நாளாக தொடரும் போராட்டம்
முதலைப்பட்டியில் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து 2-வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் கிராமமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வகுப்புகளை புறக்கணித்து மாணவ-மாணவிகளும் இதில் பங்கேற்றனர்.
2. 12 பேர் நீக்கப்பட்டதை கண்டித்து துப்புரவு பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
12 பேர் நீக்கப்பட்டதை கண்டித்து திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்ட அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. அம்மன் கோவிலை இடிக்க எதிர்ப்பு கிராமமக்கள் காத்திருப்பு போராட்டம்
முதலைப்பட்டி குளக்கரையில் உள்ள செல்லாயி அம்மன் கோவிலை இடிக்க கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4. குடியுரிமை மசோதாவுக்கு எதிரான போராட்டம்: அசாம் முதல்-மந்திரி, விமான நிலையத்தில் முடங்கினார்
குடியுரிமை மசோதாவுக்கு எதிரான போராட்டத்தால், அசாம் முதல்-மந்திரி, விமான நிலையத்தில் முடங்கினார்.
5. கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு அமைப்பினர் காத்திருப்பு போராட்டம்
ஓடை ஆக்கிரமிப்பு கடைகளுக்கு மின் இணைப்பு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு அமைப்பினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.