மாவட்ட செய்திகள்

மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி திருச்சியில் தொடக்கம் + "||" + For statewide colleges Inter-volleyball tournament starts at Trichy

மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி திருச்சியில் தொடக்கம்

மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி திருச்சியில் தொடக்கம்
மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி திருச்சியில் தொடங்கியது.
திருச்சி,

மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி திருச்சி ஜமால்முகமது கல்லூரியில் நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் திருச்சி, திண்டுக்கல், தூத்துக்குடி, கோவை, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 12 கல்லூரிகளின் அணிகள் பங்கேற்றன. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் திருச்சி மண்டல அலுவலக முதன்மை மேலாளர் சத்தியநாராயணன் நேற்று காலை போட்டியை தொடங்கி வைத்தார்.


முதல் போட்டியில் புனித ஜோசப் கல்லூரி அணி 28-26, 33-35, 25-22 என்ற புள்ளிக்கணக்கில் ஜமால் முகமது கல்லூரி பி அணியை வென்றது. 2-வது ஆட்டத்தில் ஜமால் முகமது கல்லூரி ஏ அணி திண்டுக்கல் காந்திகிராமிய நிகர்நிலை பல்கலைக்கழக அணியை 25-15, 25-16 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது.

லயோலா கல்லூரி அணி வெற்றி

3-வது போட்டியில் திண்டுக்கல் ஜி.டி.என். கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி 22-25, 25-23, 25-15 என்ற புள்ளிக்கணக்கில் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி அணியை வென்றது. 4-வது போட்டியில் திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரி அணி 25-18, 25-18 என்ற புள்ளிக்கணக்கில் கோவை டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியை வென்றது. சென்னை லயோலா கல்லூரி அணி 25-21, 23-25, 25-13 என்ற புள்ளிக்கணக்கில் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி அணியை வென்றது. இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நாளை(செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு நடக்கிறது. கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்று முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

1. கரூரில், மகளிர் தினத்தையொட்டி விளையாட்டு போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
கரூரில், மகளிர் தினத்தை யொட்டி விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
2. சேலத்தில் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டி
சேலம் கல்வி மாவட்ட அளவில் மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது.
3. மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி 7-ந் தேதி நடக்கிறது
மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி வருகிற 7-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.
4. தர்மபுரி மாவட்டத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி முதன்மை கல்வி அலுவலர் பரிசு வழங்கினார்
தர்மபுரி மாவட்டத்தில் நடந்த பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா பரிசு வழங்கினார்.
5. சேலத்தில் மண்டல விளையாட்டு போட்டி 270 மாணவர்கள் பங்கேற்பு
சேலத்தில் நடந்த மண்டல அளவிலான விளையாட்டு போட்டியில் 270 மாணவர்கள் பங்கேற்றனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை