அண்ணா பிறந்தநாளையொட்டி சைக்கிள் போட்டி அரசு தலைமை கொறடா தொடங்கி வைத்தார்


அண்ணா பிறந்தநாளையொட்டி சைக்கிள் போட்டி அரசு தலைமை கொறடா தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 16 Sept 2019 4:00 AM IST (Updated: 16 Sept 2019 12:30 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்ட விளையாட்டு துறையின் சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதல்- அமைச்சர் அண்ணா பிறந்தநாளையொட்டி நேற்று பள்ளி மாணவ- மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி நடத்தப்பட்டது.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட விளையாட்டு துறையின் சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதல்- அமைச்சர் அண்ணா பிறந்தநாளையொட்டி நேற்று பள்ளி மாணவ- மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி நடத்தப்பட்டது. அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்த சைக்கிள் போட்டியினை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், கலெக்டர் டி.ஜி.வினய் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டிகள் 3 பிரிவுகளாக நடைபெற்றது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பெற்ற வீரர்- வீராங்கனைகளுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும், முதல் 10 இடங்களை பெற்ற வீரர்- வீராங்கனைகளுக்கு தரவரிசை சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஜெயகுமார் ராஜா, உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story