தமிழக கோவில்களில் செயல் அலுவலர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்


தமிழக கோவில்களில் செயல் அலுவலர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்
x
தினத்தந்தி 15 Sep 2019 10:45 PM GMT (Updated: 15 Sep 2019 7:28 PM GMT)

தமிழக கோவில்களில் செயல் அலுவலர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி,

தமிழ்நாடு திருக்கோவில் நிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் சம்பத்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுசெயலாளர் அருட்செல்வன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் பணியில் இருந்து தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள அனைத்து செயல் அலுவலர்களுக்கும் விசாரணை நிலுவையில் வைத்து உடன் பணியிடம் வழங்க வேண்டும். தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு காரணமாக செயல் அலுவலர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தும் இணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மீது ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில்களின் நிலை உயர்த்துதல், செயல் அலுவலர் பணியிட எண்ணிக்கையை அதிகப்படுத்துதல், கோவில் பணியாளர்கள் நியமனம், செயல் அலுவலர் காலிப்பணியிடங்கள் நிரப்ப வேண்டும்.

மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

அடுத்த கட்ட நடவடிக்கை

மேலும் சம்பத்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கோவில் நிர்வாக அதிகாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகிற அக்டோபர் மாதம் 15-ந் தேதிக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றார். கூட்டத்தில் மாநில பொருளாளர் ஞானசேகரன், மாநில நிர்வாகிகள் கோவிந்தராஜ், பாரதிராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

Next Story