பிறந்தநாளையொட்டி அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
திண்டுக்கல்லில், அண்ணா பிறந்தநாளையொட்டி அவருடைய சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
திண்டுக்கல்,
முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அதன்படி திண்டுக்கல்லில், அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மருதராஜ் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் அவர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இதில் அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதிமுருகன், முன்னாள் எம்.பி. உதயகுமார், செட்டிநாயக்கன்பட்டி கூட்டுறவு சங்க தலைவர் ராஜ்மோகன், அபிராமி கூட்டுறவு சங்க துணை தலைவர் வி.டி.ராஜன், ஒன்றிய செயலாளர் ஜெயசீலன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அதேபோல் தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் அக்கட்சியினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில் மாவட்ட அவைத்தலைவர் பசீர் அகமது, நகர செயலாளர் ராஜப்பா, முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அ.ம.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ராமுத்தேவர் தலைமையில் அக்கட்சியினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில் சுரபி கல்வி நிறுவன தாளாளர் ஜோதிமுருகன், முன்னாள் எம்.எல்.ஏ. தங்கத்துரை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ம.தி.மு.க. நகர செயலாளர் செல்வேந்திரன் தலைமையில் அக்கட்சியினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தேசிய ஒருமைப்பாடு இயக்க மாநில தலைவர் அப்துல் ஜபார், காந்தி மண்டப செயலாளர் மருது உள்பட பலர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.
கொடைக்கானலில், அ.தி. மு.க. சார்பில் கே.சி.எஸ். திடலில் இருந்து அக்கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டனர். இந்த ஊர்வலம் அண்ணா சாலை, 7 ரோடு சந்திப்பு வழியாக பிரையண்ட் பூங்காவை அடைந்தது. பின்னர் அப்பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. நகர செயலாளர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். முன்னாள் நகரசபை தலைவர் எட்வர்டு, நகர அவைத்தலைவர் ஜான்தாமஸ், மாவட்ட பிரதிநிதிகள் வெங்கட்ராமன், ஆவின் பாரூக், ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து தி.மு.க.வினரும் ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் முகமது இபுராகிம் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் கண்ணன், ஒன்றிய செயலாளர் ராஜதுரை, முன்னாள் நகராட்சி கவுன்சிலர்கள் இளங்கோவன், சக்தி மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல அ.ம.மு.க.வினரும் ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். இதற்கு நகர செயலாளர் கோவிந்தன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் பொன்னுத்துரை, ஜெயக்குமார், மருத்துவ அணி செயலாளர் இளம்வழுதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ம.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் தாவூத் தலைமையில் நிர்வாகிகள் மூஞ்சிக்கல் பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
பட்டிவீரன்பட்டி ரேடியோ மைதானத்தில் உள்ள அண்ணா சிலைக்கு வத்தலக்குண்டு ஒன்றிய தி.மு.க. செயலாளர் முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் பட்டிவீரன்பட்டி நகர தி.மு.க. செயலாளர் அருண்குமார், சேவுகம்பட்டி நகர தி.மு.க. செயலாளர் தங்கராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் முத்துப்பாண்டி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அசோக், மாவட்ட பிரதிநிதி சக்திவேல், சின்னதம்பி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story