மாவட்ட செய்திகள்

கும்பகோணம் பகுதியில் தொடர் மழை: நெல் அறுவடை பணிகள் பாதிப்பு + "||" + Continuous Rainfall in Kumbakonam Area: Impact of Rice Harvesting Works

கும்பகோணம் பகுதியில் தொடர் மழை: நெல் அறுவடை பணிகள் பாதிப்பு

கும்பகோணம் பகுதியில் தொடர் மழை: நெல் அறுவடை பணிகள் பாதிப்பு
கும்பகோணம் பகுதியில் தொடர் மழை காரணமாக நெல் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் விவசாயிகள் இந்த ஆண்டு குறுகிய கால நெல் ரகங்களை சாகுபடி செய்து இருந்தனர்.

தற்போது இந்த பயிர்கள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. பல இடங்களில் நெல் அறுவடை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அறுவடையான நெல்லை, வயல் ஓரங்களில் விவசாயிகள் குவித்து வைத்து தூற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கும்பகோணம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.


மாலையில் மழை

பெரும்பாலும் மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நெல் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பல நாட்களாக பெய்து வரும் மழையில் நெல் மூட்டைகள் நனைந்து வீணாவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து நெல் அறுவடையில் ஈடுபட்டுள்ள கும்பகோணத்தை அடுத்த பேட்டை வடக்கு பகுதியை சேர்ந்த விவசாயி யோகேஸ்வரன் கூறியதாவது:- கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காவிரியில் தண்ணீர் வராத நிலையில் மோட்டார் பம்பு செட் மூலம் 4 ஏக்கரில் நெல் சாகுபடி செய்து இருந்தேன்.

காய வைக்க முயற்சி

தற்போது நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் வயலில் தண்ணீர் தேங்கி உள்ளது. பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. பெருமளவு நெற்பயிர்கள் வீணாகிவிடும் நிலை ஏற்பட்டு உள்ளது. விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து விட்டன.

நெல் அதிக ஈரப்பதத்துடன் இருப்பதால் நெல் வியாபாரிகள் குறைந்த விலைக்கு கேட்கின்றனர். இதனால் நெல்லை காய வைக்க முயற்சி செய்து வருகிறோம். தொடர் மழையால் என்னை போன்று நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் வைகை அணை நீர்மட்டம் 59 அடியாக குறைந்தது
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் வைகை அணை நீர்மட்டம் 59 அடியாக குறைந்தது.
2. மலையோர பகுதியில் கன மழை திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு; 3–வது நாளாக குளிக்க தடை
குமரி மாவட்டத்தில் மலையோர பகுதியில் பெய்த கன மழையால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், 3–வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
3. அந்தமான் அருகே தீவிர புயலாக வலுப்பெற்ற புல்புல்; மீனவர்களுக்கு எச்சரிக்கை
அந்தமான் அருகே புல்புல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
4. தமிழகத்தில் 4 நாட்கள் மழை நீடிக்கும்- சென்னை வானிலை ஆய்வு மையம்
வடகிழக்கு பருவக்காற்று சாதகமாக வீசுவதால் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
5. திருவாரூரில் 4 நாட்களாக தொடர் மழை: 100 ஏக்கர் சம்பா நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியது
திருவாரூர் பகுதியில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக 100 ஏக்கர் சம்பா நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி உள்ளது. வாய்க்கால்களை தூர்வாராததே பயிர்கள் மழைநீரில் மூழ்கியதற்கு காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.