பர்கூர் அருகே, பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு - தொழிலாளி கைது
பர்கூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
பர்கூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று இந்த சிறுமியை பாரூர் அருகே உள்ள நாகர்கோவில் பகுதியை சேர்ந்த வெற்றிவேல் (வயது 28) என்ற கூலித்தொழிலாளி ஆசை வார்த்தை கூறி அந்த பகுதியில் உள்ள ஒரு கிரானைட் நிறுவன பழைய கட்டிடத்திற்கு அழைத்து சென்றார்.
பின்னர் சிறுமிக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அங்கிருந்து வீட்டிற்கு சென்று இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் இது தொடர்பாக பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் வழக்குப்பதிவு செய்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தொழிலாளி வெற்றிவேலை கைது செய்தார். அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story