தகுதியற்ற நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வாங்கி கொடுக்கும் இடைத்தரகர்கள் - நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் மனு


தகுதியற்ற நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வாங்கி கொடுக்கும் இடைத்தரகர்கள் - நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 17 Sept 2019 4:00 AM IST (Updated: 17 Sept 2019 3:19 AM IST)
t-max-icont-min-icon

தகுதியற்ற நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வாங்கி கொடுக்கும் இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அருந்ததியர் மக்கள் இயக்கம் சார்பில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

நாமக்கல், 

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் அருந்ததியர் மக்கள் இயக்கம் சார்பில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் அவர்கள் கூறியிருப் பதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் அருந்ததியர் மக்களுக்கு பெரும்பாலும் சொந்தமாக வீடோ, நிலமோ எங்கும் இல்லை. இதனால் சாலையோரங்களிலும், தெருக்களின் ஓரங்களிலும் வாழ்ந்து வருகிறோம். மழை காலங்களில் நாங்கள் எங்களின் குழந்தைகளுடன் மிகுந்த அல்லல்படுகிறோம்.

இந்த நிலையில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கிட கோரி மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்து உள்ளோம். 2 முறை ஆர்ப்பாட்டமும் நடத்தி உள்ளோம். ஆனால் இதுவரை எங்கள் கோரிக்கையின் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்களால் எந்தவித ந டவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வீடற்ற எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா உடனடியாக வழங்க வேண்டும்.

இதேபோல் இலவச வீட்டுமனை பட்டா பெற்று தருவதாக கூறி இடைத்தரகர்கள் சட்ட விரோதமாக பணம் பெற்று வருகின்றனர். அது மட்டும் இன்றி தகுதியற்ற பயனாளிகளிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு, இடைத்தரகர்கள் பட்டா பெற்று கொடுக்கின்றனர். இதனால் தகுதியுள்ள ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இந்த முறைகேட்டின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Next Story