மாவட்ட செய்திகள்

கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை + "||" + Public blockade of the Collector's office by asking for a pea for residents of the temple lands

கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
கோவில் நிலங்களில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருக்கும் பொதுமக்கள் தங்களுக்கு பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில், கம்பம், பெரியகுளம், சின்னமனூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கணக்கானவர்கள் நேற்று வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். கோவில் நிலத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் தங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபடி ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், பொதுமக்கள் தங்களுக்கு பட்டா கேட்டு, கலெக்டர் அலுவலகத்தில் சாலை விரிவாக்கத் திட்டப் பணிக்கான சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜனிடம் தனித்தனியாக மனுக்கள் அளித்தனர்.


அரசாணை

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், ‘நாங்கள் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட கோவில் நிலங்களில் பல தலைமுறைகளாக குடியிருந்து வருகிறோம். கோவில் நிலங்களில் 25 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கலாம் என்று அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையின்படி நாங்கள் வாழும் பகுதிக்கு எங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சேலம் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
சேலத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
2. தீபாவளி பண்டிகை முன்பணம் வழங்கக்கோரி, கடலூர் நகராட்சி அலுவலகத்தை துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகை
தீபாவளி பண்டிகைக்கு முன்பணம் வழங்கக்கோரி கடலூர் நகராட்சி அலுவலகத்தை துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
3. தனியார் மின் உற்பத்தி நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை திட்டச்சேரி அருகே பரபரப்பு
திட்டச்சேரி அருகே தனியார் மின் உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. மது விற்பனையை தடுக்க கோரி பொதுமக்கள் மனு
குளித்தலை அருகே உள்ள கருங்கலாப்பள்ளி பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று குளித்தலை போலீஸ் நிலையத்தில் கோரிக்கை மனு ஒன்று கொடுத்தனர்.
5. ராசிபுரத்தில் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
ராசிபுரத்தில் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.