கல்யாண கர்நாடக வளர்ச்சிக்கு தனி இலாகா உருவாக்கப்படும் விடுதலை தின விழாவில் - எடியூரப்பா அறிவிப்பு
கல்யாண கர்நாடக பகுதியின் வளர்ச்சிக்கு தனி இலாகா உருவாக்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார்.
பெங்களூரு,
கர்நாடகத்தின் பீதர், யாதகிரி, ராய்ச்சூர், கொப்பல், கலபுரகி, பல்லாரி ஆகிய 6 மாவட்டங்கள் ஐதராபாத்-கர்நாடக என்று அழைக்கப்பட்டு வந்தது. அந்த பெயரை மாற்றி முதல்-மந்திரி எடியூரப்பா, கல்யாண கர்நாடக என்று பெயர் சூட்டியுள்ளார். இந்த நிலையில் கல்யாண கர்நாடக விடுதலை தின விழா கலபுரகியில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு, தேசிய கொடியை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் நடந்த நிகழ்ச்சியில் எடியூரப்பா பேசியதாவது:-
பின்தங்கிய நிலையில் உள்ள கல்யாண கர்நாடக பகுதியில் 6 மாவட்டங்கள் உள்ளன. இந்த பகுதியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த 6 மாவட்டங்களின் வளர்ச்சிக்காக ஒரு தனி இலாகா உருவாக்கப்படும். வருகிற பட்ஜெட்டில் இந்த பகுதியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
அதிக நிதி ஒதுக்கி வளர்ச்சிக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்த ஐதராபாத்-கர்நாடக பகுதி ஐதராபாத் நிஜாம் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. சர்தார் வல்லபாய் பட்டேல் உள்துறை மந்திரியாக இருந்தபோது, இந்த பகுதியை அதிரடியாக மீட்டு கர்நாடக வசம் ஒப்படைக்கப்பட்டது. சர்தார் வல்லபாய் பட்டேல் திடமாக செயல்பட்டு இந்த நடவடிக்கை எடுத்தார். நாங்கள் தற்போது இந்த பகுதிக்கு கல்யாண கர்நாடக என்று பெயர் மாற்றம் செய்துள்ளோம்.
பிரதமர் மோடி, இந்த பகுதியின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அதுவும் மோடியின் பிறந்த நாளில் ஐதராபாத்-கர்நாடக என்ற பெயரை கல்யாண கர்நாடக என்று பெயரை மாற்றி விடுதலை நாளை கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பகுதிக்கு அநீதி ஏற்படாமல், அதிக நிதி ஒதுக்கீடு செய்வேன். அடுத்த முறை மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறும்போது, இந்த பகுதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். இவ்வாறு எடியூரப்பா பேசினார்.
இதில் சட்டத்துறை மந்திரி மாதுசாமி, உமேஷ் ஜாதவ் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலைக்கு எடியூரப்பா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து, அங்கு பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதேபோல, ராய்ச்சூர், கொப்பல், யாதகிரி, பல்லாரி, பீதர் ஆகிய மாவட்டங்களில் கல்யாண கர்நாடக தொடக்க விழா நடைபெற்றது.

Related Tags :
Next Story