மாவட்ட செய்திகள்

தொடர் மழை எதிரொலி: அன்னவாசல் பகுதியில் விவசாய பணிகள் தீவிரம் + "||" + Continuous rain echo: intensification of agricultural work in Annawasal

தொடர் மழை எதிரொலி: அன்னவாசல் பகுதியில் விவசாய பணிகள் தீவிரம்

தொடர் மழை எதிரொலி: அன்னவாசல் பகுதியில் விவசாய பணிகள் தீவிரம்
தொடர் மழையின் காரணமாக அன்னவாசல் பகுதியில் விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அன்னவாசல்,

பருவநிலை மாற்றத்தால் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை சீராக பெய்யவில்லை. இதனால் விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டதோடு, உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத நிலையும் உள்ளது. இதனால் விவசாயத்தை நம்பி இருந்த விவசாயிகளும், விவசாய கூலி தொழிலாளர்களும் தவிப்புக்கு உள்ளாகின்றனர். பெரும்பாலான விளை நிலங்களில் விவசாயம் செய்யப் படாத நிலையும் உள்ளது.

இந்நிலையில் அன்ன வாசல் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. இதனால் தொடர்ந்து பருவமழை பெய்யும் என்ற நம்பிக்கையில், மழைநீரை பயன்படுத்தி தங்கள் வயல்களில் விவசாய பணிகளை தொடங்கி, தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நடவு பணிகள் தீவிரம்

அதன்படி அன்னவாசல் அருகே உள்ள செங்கப்பட்டி, சித்தன்னவாசல், சத்திரம், முக்கண்ணாமலைப்பட்டி, காலாடிப்பட்டி, வீரப்பட்டி, தாண்றீஸ்வரம், சென்னப்பநாயக்கன்பட்டி, வவ்வாநேரி, கடம்பராயன்பட்டி, புதூர், மேட்டுச்சாலை, இலுப்பூர் போன்ற பகுதிகளில் விவசாயிகள் ஏர் பூட்டியும், டிராக்டர் மூலமும் உழவு பணிகளை மேற்கொண்டனர். இதனால் உழப்பட்ட விளைநிலங்கள் விதைக்க தயார் நிலையில் உள்ளன.

இதற்கிடையே ஆழ்குழாய் கிணறு மூலம் கிடைக்கும் தண்ணீரை வைத்து சில பகுதிகளில் ஏற்கனவே விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்பகுதிகளில் நடவு பணிகள் ெதாடங்கியுள்ளன. இதில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை: குற்றாலத்தில் சீசன் தொடங்கியது - கொரோனா ஊரடங்கால் வெறிச்சோடிய அருவிக்கரை
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் குற்றாலத்தில் சீசன் தொடங்கியது. ஆனாலும் கொரோனா ஊரடங்கால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் அருவிக்கரை வெறிச்சோடி காணப்படுகிறது.
2. பாகூர், கிருமாம்பாக்கம், மணவெளியில் கொட்டி தீர்த்த மழை
புதுவையில் உள்ள பாகூர், கிருமாம்பாக்கம், மணவெளி உள்ளிட்ட கிராமப்புறங்களில் நேற்று மழை கொட்டி தீர்த்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. மின் தடையால் கிராமங்கள் இருளில் மூழ்கின.
3. பலத்த காற்றுடன் மழை:; 20 வீடுகள், பயிர்கள் சேதம்; மின்கம்பங்கள் முறிந்து மின்தடை
திருச்செங்கோடு அருகே, பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு 20 வீடுகள், பயிர்கள் சேதம் அடைந்தன. மின்கம்பங்கள் முறிந்து மின்தடை ஏற்பட்டுள்ளது.
4. பலத்த காற்றுடன் திடீர் மழை
புதுச்சேரியில் நேற்று பலத்த காற்றுடன் திடீரென மழை பெய்தது.
5. புதுவையில் திடீர் மழை
புதுவையில் நேற்று திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.