குண்டவெளி கிராமத்திற்கு அடிப்படை வசதி கேட்டு ஜனநாயக மாதர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
குண்டவெளி கிராமத்திற்கு அடிப்படை வசதி கேட்டு ஜனநாயக மாதர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
மீன்சுருட்டி,
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு குண்டவெளி கிராம மக்களுக்கு அடிப்படை வசதி கேட்டு ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது. போராட்டத்துக்கு சங்க கிளை செயலாளர் கொளஞ்சியம்மாள் தலைமை தாங்கினார். அமுதா, துளசி, ஜெயலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் அம்பிகா வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட ஜனநாயக மாதர் சங்க மாநில தலைவர் வாலண்டீனா, மாவட்ட செயலாளர் பத்மாவதி, மாவட்ட துணைச் செயலாளர் மீனா, ஒன்றிய தலைவர் மணியம்மாள் ஆகியோர் கண்டன உரையாற்றினர். போராட்டத்தில் குண்டவெளி கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும். மேலும் அந்த கிராமத்தில் உள்ள காலனி பொது மக்களுக்கு ரேஷன் கடை தனியாக அமைத்திட வேண்டும், முதியோர், விதவை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் உதவித்தொகையை வழங்க வேண்டும். மயானத்திற்கு செல்லும் பாதையில் மின்விளக்கு மற்றும் குடி தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும்.
சுற்றுச்சுவர்
சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றி தர வேண்டும். மீன்சுருட்டி பகுதியில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதிக்கு சுற்றுச் சுவர் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கேரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காத்திருக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

Related Tags :
Next Story