அ.தி.மு.க. அரசை அசைக்க முடியாது பொதுக்கூட்டத்தில் தளவாய்சுந்தரம் பேச்சு
அ.தி.மு.க. அரசை அசைக்க முடியாது என நாகர்கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் பேசினார்.
நாகர்கோவில்,
அண்ணாவின் 111-வது ஆண்டு பிறந்தநாள் விழாவையொட்டி நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை நகர செயலாளர் சந்துரு தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன் அனைவரையும் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
ஒரு கட்சியின் வெற்றி மற்றும் தோல்வியை முடிவு செய்வது பதவியோ, பணமோ அல்ல. பொதுமக்கள் தான் தீர்மானிக்கிறார்கள். இது அறியாமல் சிலர் பதவிக்காக கட்சியை விட்டு செல்கின்றனர். இதனால் எந்தவித பயனும் இல்லை.
தமிழகத்தில் ஆட்சி....
பலமுறை தோல்வியை நான் சந்தித்த போதும் வேறு கட்சிக்கு செல்லும் எண்ணம் கனவிலும் எனக்கு வந்தது இல்லை. இதற்கு காரணம் கட்சியின் மீது நான் வைத்துள்ள பற்றும், நேசமும் ஆகும். இனிவரும் தேர்தலிலும் தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு ஆட்சியை அமைக்கும். அ.தி.மு.க. அரசை அசைக்க முடியாது.
இவ்வாறு தளவாய்சுந்தரம் பேசினார்.
கூட்டத்தில், கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன், பேச்சாளர் நைனா முகமது, முன்னாள் மாவட்ட செயலாளர் சிவசெல்வராஜன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில், மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Related Tags :
Next Story