கும்பகோணம் பகுதியில் மழைநீரில் மூழ்கி அழுகும் காய்கறிகள் - விவசாயிகள் வேதனை
கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர் மழை காரணமாக மழைநீரில் மூழ்கி காய்கறிகள் அழுகி வருகின்றன. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
கும்பகோணம்,
தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் பகல் நேரங்களில் வெயில் அடிப்பதும், மாலை நேரங்களில் மழை பெய்வதுமாக உள்ளது. பலத்த மழை காரணமாக கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கத்தரி, வெண்டை, பீர்க்கங்காய், சுரைக்காய் உள்ளிட்ட காய்கறி பயிர்களை சாகுபடி செய்த வயல்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அறுவடைக்கு தயாராக உள்ள காய்கறிகள் மழைநீரில் மூழ்கி அழுகி விடுவதாக விவசாயிகள் வேதனையுடன் கூறுகிறார்கள். இதுகுறித்து அந்த பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-
தொடர்ந்து மழை பெய்து வருவதால் காய்கறி பயிர் சாகுபடி செய்த வயல்களில் இருந்து மழைநீர் வடிய வாய்ப்பு இல்லை. பல நாட்கள் பாடுபட்டு விளைவித்த கத்தரி, சுரைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் மழைநீரில் மூழ்கி அழுகி வீணாகி வருகின்றன.
கீரை பயிர்களும் நீரில் மூழ்கி விற்பனைக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அழுகிய காய்கறிகள் மற்றும் கீரைவகைகளை கால்
நடைகளுக்கு உணவாக கூட கொடுக்க முடியாத அவலம் நிலவுகிறது. இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
Related Tags :
Next Story