மாவட்ட செய்திகள்

பள்ளி வேன்- அரசு பஸ் நேருக்கு நேர் மோதல் 10 மாணவ- மாணவிகள் உள்பட 23 பேர் காயம் + "||" + 23 students, including 10 students, were injured when a school van collided with a government bus

பள்ளி வேன்- அரசு பஸ் நேருக்கு நேர் மோதல் 10 மாணவ- மாணவிகள் உள்பட 23 பேர் காயம்

பள்ளி வேன்- அரசு பஸ் நேருக்கு நேர் மோதல் 10 மாணவ- மாணவிகள் உள்பட 23 பேர் காயம்
வேப்பந்தட்டை அருகே பள்ளி வேன்- அரசு பஸ் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 10 மாணவ- மாணவிகள் உள்பட 23 பேர் காயம் அடைந்தனர்.
வேப்பந்தட்டை,

சேலம் மாவட்டம், வீரகனூரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பூலாம்பாடி, அரசடிக்காடு ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று காலை அரசடிக்காடு, பூலாம்பாடி பகுதியில் இருந்து பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு தனியார் பள்ளி வேன் வீரகனூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ஆத்தூரில் இருந்து பூலாம்பாடி நோக்கி அரசு பஸ் வந்தது. பூலாம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக பள்ளி வேனும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.


23 பேர் காயம்

இதில் பள்ளி வேனில் பயணம் செய்த குழந்தைகள் சன்மதி(வயது 6), தரனே‌‌ஷ்(8), ரகுநாத்(11), விகா‌‌ஷ்(11), மகேஸ்வரி(12) உள்பட 10 மாணவ- மாணவிகள் மற்றும் வேன் டிரைவர் சத்தியராஜ்(27) ஆகியோர் காயமடைந்தனர். இதேபோல் அரசு பஸ்சில் பயணம் செய்த சேலம் மாவட்டம், கெங்கவல்லியை சேர்ந்த தாரணி(33), ஆணையம்பட்டி லட்சுமி(45), வீரகனூர் தேன்மொழி(40) உள்பட 12 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு பூலாம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தனர். மேலும் பள்ளி வேனை ஓட்டி வந்த வேப்படிபாலக்காடு கிராமத்தை சேர்ந்த சத்தியராஜை மேல்சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அவினாசி அருகே கோர விபத்து: மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; 3 பேர் பலி
அவினாசி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
2. வானூர் அருகே குடிபோதையில் ரகளை இரு கிராமங்களுக்கு இடையே மோதல்; கடைகளுக்கு தீ வைப்பு 2 பேர் கைது
வானூர் அருகே குடி போதையில் ரகளை செய்தவர்களால் இரு கிராமங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 2 கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. அஜர்பைஜானுடன் மோதல்; ஆர்மீனியாவின் 2,317 வீரர்கள் பலி
அஜர்பைஜான் நாட்டுடனான மோதலில் ஆர்மீனியா நாட்டின் 2,317 வீரர்கள் பலியாகி உள்ளனர்.
4. ராய்ச்சூர் அருகே, கார்கள் நேருக்குநேர் மோதல் மருத்துவ மாணவர்கள் 3 பேர் பலி மேலும் இருவர் படுகாயம்
ராய்ச்சூர் அருகே, 2 கார்கள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் மருத்துவ மாணவர்கள் 3 பேர் பலியானார்கள். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
5. கந்தர்வகோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; கணவன்-மனைவி பலி
கந்தர்வகோட்டை அருகே கல்லறை திருநாளில் பொருட்கள் வாங்க சென்ற போது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் கணவன்-மனைவி பலியாகினர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை