பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுவழி கோரி ஓட்டல்களை அடைத்து உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
கீரமங்கலத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய கோரி ஓட்டல் உரிமையாளர்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கீரமங்கலம்,
சுற்றுச்சூழல் மற்றும் உடல் நலன் காக்க பிளாஸ்டிக் பொருட்களை தமிழ்நாடு அரசு தடைவித்துள்ளது. தமிழக அரசின் இந்த திட்டத்தை பொதுமக்களும் வரவேற்று பிளாஸ்டிக் பைகளை பயன் படுத்துவதை குறைத்து வருகின்றனர்.
இந்தநிலையில் கீரமங்கலம் பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த பேரூராட்சி நிர்வாகம் கடுமையான தடை விதித்துள்ளது. மேலும் மீறி பயன்படுத்தப்படும் போது அந்த பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஆர்ப்பாட்டம்
கீரமங்கலம் பேரூராட்சி நிர்வாகம் தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், கீரமங்கலம் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில், அரசின் பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டத்தை வரவேற்கிறோம். ஆனால் அதற்கு மாற்று பொருளை அரசு அறிமுகப்படுத்தினால் எங்கள் வியாபாரம் பாதிக்காது என்று கோரிக்கை வைத்து ஒரு நாள் ஓட்டல்களை அடைத்தனர். மேலும் பஸ் நிலையம் அருகே ஓட்டல் உரிமையாளர்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் ஓட்டல் உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story