வந்தவாசி அருகே, கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை


வந்தவாசி அருகே, கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 20 Sept 2019 4:00 AM IST (Updated: 20 Sept 2019 3:58 AM IST)
t-max-icont-min-icon

வந்தவாசி அருகே கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வந்தவாசி, 

வந்தவாசியை அடுத்த கோதண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவருடைய மகள் சுமித்ரா (வயது 21). வந்தவாசியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த இவரால் கல்லூரி படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது, சுமித்ரா தனது அறையில் தன் மீது மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். இதில் சுமித்ரா உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த வடவணக்கம்படி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சுமித்ராவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து சுமித்ராவின் தாய் ஜோதி அளித்த புகாரின் பேரில் வடவணக்கம்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story