மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் யானைகளை வேட்டையாடி தந்தங்களை விற்பனை செய்தவர் கைது


மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் யானைகளை வேட்டையாடி தந்தங்களை விற்பனை செய்தவர் கைது
x
தினத்தந்தி 22 Sept 2019 4:00 AM IST (Updated: 22 Sept 2019 3:04 AM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையம்வனப்பகுதியில்யானைகளைவேட்டையாடி தந்தங்களைவிற்பனை செய்த வழக்கில் 3ஆண்டுகளாக தலைமறைவாகஇருந்தவர் கைது செய்யப்பட்டார்.

மேட்டுப்பாளையம், 

கோவைவனக்கோட்டத்திற்குட்பட்டகோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம்,சிறுமுகைஆகியவனச்சரகங்கள் உள்ளன. இங்கு அடர்ந்த வனப்பகுதிகளில்காட்டு யானை,காட்டெருமை, வரையாடு, புள்ளிமான், கரடி, சிறுத்தை, செந்நாய் உள்பட பல்வேறு வனவிலங்குகள் மற்றும் பறவைகள் கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றன.

கடந்த 2011-ம்ஆண்டு மேட்டுப்பாளையம்வனப்பகுதியில்3 ஆண் யானைகளும்,சிறுமுகைவனப்பகுதியில்1 ஆண் யானையும்மர்ம கும்பலால்வேட்டையாடப்பட்டு, தந்தங்கள்வெட்டி கடத்தப்பட்டுஇருப்பது தெரியவந்தது. மேலும் சீகூர்வனப்பகுதியில்1 யானையும், வல்லக்கடவுவனப்பகுதியில்1 யானையும், வருசநாடுவனப்பகுதியில்3 யானைகளும் தந்தத்திற்காக வேட்டையாடப்பட்டன.சங்கிலிதொடர்போல்இந்த சம்பவங்கள் 2015-ம்ஆண்டு தமிழகத்தையேஉலுக்கியது.

இந்தநிலையில்சீகூர்வனப் பகுதியில்கடந்த 2015-ம்ஆண்டு வனத்துறையினர்யானைகளை வேட்டையாடமுயற்சி செய்த தேனிவருசநாடு பகுதியைசேர்ந்த சிங்கம் (வயது 45), குபேந்திரன் (42) ஆகிய 2பேரை கைதுசெய்தனர். இவர்கள் கடந்த 2016-ம்ஆண்டு கல்லார்வனப்பகுதியில்வேட்டையாடிய யானைகள் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டினர். அந்த இடங்கள் தோண்டப்பட்டு எலும்புக்கூடுகள்பிரேத பரிசோதனைசெய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்கள் அளித்த வாக்குமூலம்குறித்து போலீசார்கூறியதாவது:-

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம்உடுப்பஞ்சோலைதாலுகா,கொச்சேரிஅஞ்சல்,மந்திப்பாறையைசேர்ந்த செட்டியார் என்கிறபாபுஜோஸ்(40) என்பவர் தந்தத்திற்காக யானைகளை வேட்டையாட கைதான சிங்கம் உள்பட பல்வேறுநபர்களுக்கு பணம்கொடுத்துஆசையை தூண்டிஉள்ளார். இவர்கள்வனப்பகுதியில்யானைகள் நடமாட்டம் மிகுந்தபகுதிகளை பாபுஜோசுக்கு அடையாளம் காட்டுவார்கள்.

இதைத் தொடர்ந்துபாபுஜோஸ்இவர்களை போன்றவேட்டை கும்பல்களுக்கு துப்பாக்கி, அரிவாள் மற்றும் தேவையான பொருள்களைவாங்கி கொடுத்து வேட்டை கும்பலை காரில்சம்பவஇடங்களுக்கு கொண்டு சென்றுஉள்ளார்.வேட்டை கும்பல்வனப்பகுதியில்யானைகளைவேட்டையாடி தந்தங்களைவெட்டிய பின்னர்அவருக்கு தகவல்கொடுப்பார்கள். உடனே அவர் வந்துவேட்டையாடியவர்களுக்கு பணத்தை கொடுத்து விட்டு தந்தங்களை திருவனந்தபுரம்கொண்டு சென்று விற்பனை செய்து விடுவார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து சிங்கம், குபேந்திரன் கோர்ட்டில்ஆஜர்படுத்தப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டனர். மேலும்யானைகளை சுட்டுவேட்டையாட தூண்டியபாபுஜோஸ்மீதுசிறுமுகைவனத்துறையினரும், மேட்டுப்பாளையம்வனத்துறையினரும்வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்தநிலையில்பாபுஜோஸ்சென்னை உயர்நீதிமன்றத்தில்சிறுமுகைவனத்துறையினர்பதிவு செய்த வழக்கிற்கு முன்ஜாமீன் பெற்றுவிட்டார். ஆனால் மேட்டுப்பாளையம்வனத்துறையினர்தகுந்த ஆவணங்களை அளித்ததின் பேரில் மேட்டுப்பாளையம் வழக்கிற்கு அவரால் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெறமுடியவில்லை.

இதைத் தொடர்ந்து அவர் கடந்த 3 ஆண்டுகளாக மேட்டுப்பாளையம் வழக்கு விசாரணைக்கு வராமல் தலைமறைவாகஇருந்ததாக தெரிகிறது.இந்தநிலையில்பாபுஜோஸ்சிறுமுகைவழக்கு விசாரணைக்காக நேற்று முன்தினம் மேட்டுப்பாளையம் கோர்ட்டுக்கு வந்தார். இதுகுறித்து தகவல் மேட்டுப்பாளையம்வனத்துறையினருக்கு கிடைத்தது. உடனே மாவட் டவனஅலுவலர்வெங்கடேஷ் உத்தரவின் பேரில் வனச்சரக அலுவலர் செல்வராஜ் தலைமையில்வனத்துறையினர் கோர்ட்டு அருகில்உள்ள கடைக்குவந்தபாபுஜோசை மடக்கி பிடித்து கைதுசெய்தனர்.

இதன் பின்னர்வனப்பகுதியில்வேட்டையாடிய யானைகள் புதைக்கப்பட்ட இடத்தைவனத்துறையினருக்குஅவர் அடையாளம் காட்டினார்.வனத்துறையினர்பாபுஜோஸ்மீது வனஉயிரின பாதுகாப்புசட்டம்உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை மேட்டுப்பாளையம் ஜுடிசியல் கோர்ட்டு் மாஜிஸ்திரேட் முன்புஆஜர்படுத்தி கோவைமத்திய சிறையில்அடைத்தனர்.

Next Story