கல்லாவி அருகே, மாணவிக்கு பாலியல் தொந்தரவு - பிளஸ்-2 மாணவருக்கு வலைவீச்சு


கல்லாவி அருகே, மாணவிக்கு பாலியல் தொந்தரவு - பிளஸ்-2 மாணவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 22 Sept 2019 3:45 AM IST (Updated: 22 Sept 2019 3:04 AM IST)
t-max-icont-min-icon

கல்லாவி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பிளஸ்-2 மாணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கல்லாவி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது கல்லாவி அருகே உள்ள மோட்டூரை சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவர் ஒருவர் மாணவியின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

பின்னர் அவர் வீட்டில் தனியாக இருந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

இதனால் பயந்து போன அந்த மாணவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் இந்த சம்பவம் தொடர்பாக கல்லாவி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வன் விசாரித்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பிளஸ்-2 மாணவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகிறார்.

Next Story