சிறுமியை கரண்டியால் அடித்த ஆசிரியை ஜெயிலில் அடைப்பு


சிறுமியை கரண்டியால் அடித்த ஆசிரியை ஜெயிலில் அடைப்பு
x
தினத்தந்தி 23 Sept 2019 4:45 AM IST (Updated: 23 Sept 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

குளச்சல் அருகே சிறுமியை கரண்டியால் தாக்கிய ஆசிரியை தக்கலை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

குளச்சல்,

குளச்சல் அருகே பெத்தேல்புரம், படுவாக்கரையை சேர்ந்தவர் வர்க்கீஸ். இவருடைய மகள் ஐஸ்வர்யா (வயது 6). அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறாள். சிறுமி ஐஸ்வர்யா தனது வீட்டின் அருகே உள்ள ஆசிரியை ஜெசிமோள் (46) என்பவரிடம் டியூசனுக்கு செல்வது வழக்கம்.

சம்பவத்தன்று டியூசனுக்கு சென்ற சிறுமி கணக்கு பாடம் படிக்கவில்லை என ஜெசிமோள் கரண்டியால் சரமாரியாக தாக்கினார். இதில் சிறுமியின் முதுகில் ரத்த காயங்கள் ஏற்பட்டன. இதுகுறித்து குளச்சல் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியை ஜெசிமோளை கைது செய்தனர்.

ஜெயிலில் அடைப்பு

அவரிடம் நடத்திய விசாரணையில் சிறுமி சரியாக படிக்கவில்லை என கரண்டியால் தாக்கியதாகவும், காயத்துடன் வீட்டுக்கு அனுப்பினால், பெற்றோர் கண்டுபிடித்து தகராறு செய்வார்கள் என நினைத்து தனது வீட்டிலேயே தங்க வைத்ததாகவும் ஜெசிமோள் போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீசார் தக்கலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பெண்கள் ஜெயிலில் அடைத்தனர்.


Next Story