ராசிபுரம், நாமகிரிப்பேட்டை ஒன்றியங்களில் ரூ.2 கோடியில் புதிய கட்டிடங்கள் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்


ராசிபுரம், நாமகிரிப்பேட்டை ஒன்றியங்களில் ரூ.2 கோடியில் புதிய கட்டிடங்கள் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்
x
தினத்தந்தி 23 Sept 2019 4:15 AM IST (Updated: 23 Sept 2019 2:50 AM IST)
t-max-icont-min-icon

ராசிபுரம், நாமகிரிப்பேட்டை ஒன்றியங்களில் ரூ. 2 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பூங்கா, உடற்பயிற்சி மையம் உள்ளிட்ட புதிய கட்டிடங்களை அமைச்சர்கள் தங்கமணி, டாக்டர் சரோஜா ஆகியோர் திறந்து வைத்தனர்.

ராசிபுரம்,

ராசிபுரம் ஒன்றியம் மெட்டாலாவில் ரூ.20 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட அம்மா பூங்கா, ரூ.10 லட்சத்தில் அமைக்கப்பட்ட அம்மா உடற்பயிற்சி மையம், ரூ.8 லட்சத்தில் கட்டப்பட்ட ரே‌‌ஷன் கடை கட்டிடம் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு நாமக்கல் உதவி கலெக்டர் கிராந்திகுமார் பதி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினர்களாக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி, சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு பூங்கா, உடற்பயிற்சி மையம், ரே‌‌ஷன் கடை கட்டிடத்தை ரிப்பன்வெட்டி திறந்து வைத்தனர். தொடர்ந்து மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.69 லட்சத்து 50 ஆயிரம் கடனுதவி வழங்கினர்.

இந்த விழாவில் நாமகிரிப்பேட்டை முன்னாள் ஒன்றியக்குழு தலைவரும், ஒன்றிய அ.தி.மு.க. செயலாளருமான இ.கே.பொன்னுசாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் எல்.எஸ்.மணி, ராசிபுரம் நகர வங்கி தலைவர் பாலசுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ. கலாவதி, மோகனூர் சர்க்கரை ஆலை தலைவர் சுரே‌‌ஷ்குமார், நாமகிரிப்பேட்டை முன்னாள் ஒன்றிய குழு துணைத் தலைவர் கணேசன், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் கே.பி.எஸ்.சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ரூ.2 கோடி புதிய கட்டிடம்

அதேபோல் கார்கூடல்பட்டி ஊராட்சி 9-ம் பாலிக்காடு பகுதியில் ரூ.8 லட்சத்தில் புதிய ரே‌‌ஷன்டை, நாரைக்கிணறு பஸ் நிறுத்தம் அருகே ரூ.9 லட்சத்தில் உயர் மின்கோபுர விளக்கு, பிலிப்பாகுட்டை பஸ் நிறுத்தம் அருகே ரூ.9 லட்சத்தில் உயர் மின் கோபுர விளக்கு, வெங்காயபாளையத்தில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ரே‌‌ஷன் கடை கட்டிடம், காக்காவேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நவீன கட்டிடம் உள்பட மொத்தம் ரூ.2 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களையும் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்த விழாக்களில் முன்னாள் எம்.பி. சுந்தரம், ராசிபுரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் காளியப்பன், வெண்ணந்தூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தாமோதரன், ராசிபுரம் வீட்டு வசதி சங்க தலைவர் கோபால், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் முருகேசன், காண்டிராக்டர் மகேந்திரன், பிள்ளாநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் கிரு‌‌ஷ்ணவேணி, பேரூராட்சிகளின் உதவி பொறியாளர் ஜவஹர், பிள்ளாநல்லூர் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் வெண்ணிலா தேவராஜன், ராசிபுரம் ஒன்றிய அ.தி.மு.க. மகளிர் அணி செயலாளர் பாலாமணி மற்றும் அரசு துறை அதிகாரிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story