பழவேற்காடு ஏரியில்: முகத்துவாரம் தூர்வாரும் பணி நிறுத்தம் - போராட்டம் நடத்த மீனவர்கள் முடிவு

பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஏரியில் உள்ள முகத்துவாரத்தில் நடந்து வந்த தூர்வாரும் பணியினை வனத்துறையினர் நிறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
பொன்னேரி,
பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஏரிப்பகுதியில் கடலும், ஏரியும் கலக்கும் இடமான முகத்துவாரம் அமைந்துள்ளது. ஆரணியாறு, காலங்கி ஆறு, சொர்ணமுகி ஆறு ஆகியவற்றின் வடிநிலப்பகுதியான பழவேற்காடு ஏரியில் ஆற்று நீர் நுழைந்து முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கும். பருவமழைக்காலங்களில் 3 ஆறுகளிலிருந்து அடித்து வரப்படும் கழிவுப்பொருட்கள் ஏரியில் தேங்கியபின்னர், மழைநீர் மற்றும் வெள்ள நீர் கடலில் கலந்துவிடும்.
கடந்த 2 ஆண்டுகளாக ஏரியில் நீர்வரத்து குறைந்ததால் கோடை காலத்தின் போது வறட்சி ஏற்பட்டது. மேலும், கடல் அலை சீற்றத்தால் முகத்துவார பகுதி முழுவதும் மணல் மேடானது.
இதனால் மீனவர்கள் படகுகள் மூலம் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், மீனவர்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன் சட்டமன்றத்தில் விடுத்த வேண்டுகோளின்படி, தமிழக அரசு தற்காலிகமாக 1 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஏரியின் முகத்துவாரம் பகுதியை தூர்வார முடிவு செய்தது.
இதனையடுத்து, மீன்வளத் துறையின் மூலம் முகத்துவாரத்தை தூர்வாரும் பணியை கடந்த 7-ந் தேதி மீன்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில், மிதவை எந்திரம் மூலம் பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன் துவக்கி வைத்தார். இந்நிலையில் 4 நாட்களாக தொடர்ந்து தூர்வாரும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், திடீரென்று தமிழக அரசின் வனத்துறை அதிகாரிகள் பழவேற்காடு ஏரியானது வனத்துறையின் கட்டுப்பாட்டில் வருவதாகவும், எனவே உரிய அனுமதியில்லாமல் மிதவை எந்திரத்தின் மூலம் முகத்துவாரத்தை தூர்வார கூடாது என்று தூர்வாரும் பணியை நிறுத்தினர்.
தூர்வாரும் பணி திட்டம் நிறுத்தப்பட்டு 10 நாட்களுக்கு மேலாகிய நிலையில், மீன்வளத்துறையினர், வனத்துறையினரை அணுகி அனுமதி பெறாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்ய முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அதிருப்தி அடைந்த பழவேற்காடு ஏரியை சுற்றிவசிக்கும் 60-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் கூட்டம் நடத்தினர். அப்போது இந்தக் கூட்டத்தில், முகத்துவாரத்தை தொடர்ந்து தூர்வாரும் பணிக்கு அனுமதி வழங்காத நிலை ஏற்பட்டால், மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என முடிவு செய்தி இருப் பதாக தெரிவித்தனர்.

Related Tags :
Next Story